தினகரன் தனக்கென ஒரு அணியை வைத்து ஆர்.கே. நகரில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்று எம்எல்ஏவாக சட்டசபைக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். மன்னார்குடி பரம்பரையில் ஒரு எம்எல்ஏ என்று அவர்களின் வகையறாக்களே சந்தோசப்பட்டதாக தெரியவில்லை.
ஒதுக்கிய முதல்வர்
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை டிடிவி தினகரன் சொன்னதைத்தான் முதல்வர், அமைச்சர்கள் கேட்டு வந்தனர். இரட்டை இலைக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கு தினகரன் மீது பாயவே ஒரேடியாக ஒதுக்கி விட்டனர். தினகரனை வழிப்போக்கர் என்று ஜெயக்குமார் கூட, ஒ எஸ் மணியனோ காலாவதியானவர் தினகரன் என்று பேட்டி தட்டுகிறார்.
18 பேர் தகுதி நீக்கம்
டிடிவி தினகரனை நம்பிப்போன 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்த பின்னர் துணை முதல்வரானார் ஓபிஎஸ். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று டிடிவி தினகரன் முதன் முறையாக மதுரையில் கூட்டம் போட்டார். அப்போது கூடிய கூட்டம் அசரடித்தது.
உள்ளடியை சமாளிக்கும் தினகரன்
டிடிவி தினகரனுக்கு ஒரு பக்கம் அரசியல் ரீதியான குடைச்சல்கள் இருந்தாலும் மன்னார்குடி குடும்பத்தினர் திவாகரன், விவேக், கிருஷ்ணபிரியா, மச்சினர் வெங்கடேஷ், ஜெயானந்த், என குடைச்சல் கொடுக்க பலர் இருக்கிறார்கள். இதை சமாளிக்கவே தனக்கு ஒரு அமைப்பு வேண்டும் என்று நினைத்திருக்கலாம் டிடிவி தினகரன்.
ஈபிஎஸ் ஓபிஎஸ் அணிகள் இணைந்தது போல தனது அணியும் அதிமுக உடன் இணையும் என்ற நம்பிக்கை டிடிவி தினகரனின் ஒவ்வொரு செல்லிலும் பரவியுள்ளது. எனவேதான் இன்றைய கூட்டத்தில் கூட அதிமுகவையும், இரட்டை இலையையும் கைப்பற்றுவதே தமது பணி என்று கூறியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம்
ஆட்சியமைக்கும் என்றும் பகிரங்கமாக அறிவித்துள்ளார் தினகரன்.
மாஸ் காட்டிய தினகரன்
சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்த போது டிடிவி தினகரன் தனது அமைப்பின் பெயரை அறிவிக்க அதே நாள் நேரத்தை தேர்ந்தெடுத்தார். 18 எம்எல்ஏக்கள் மட்டும்தான் தினகரன் பின்னால் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் லட்சக்கணக்கானோரை கூட்டி வந்து மாஸ் காட்டி விட்டார்.

loading...
No comments:
Post a Comment