Eyecon-எனும் செயலி பதிவிறக்கம் செய்து,இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
ஒருவரின் மொபைல் நம்பரை வைத்து அவரின் முழுத் தகவல்களையும் மிக எளிமையா கண்டுபிடிக்க முடியும், மேலும் இந்த பயன்பாட்டுக்கு குறிப்பிட்ட செயலி தேவைப்படுகிறது. ஆன்லைனில் கிடைக்கும் பல்வேறு செயலிகளில் நம்பகத்தன்மையுள்ள செயலிகளை மட்டும் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
ஒருவரின் மொபைல் நம்பரை வைத்து அவரின் தகல்களை கண்டுபிடிக்க ஆன்லைனில் Eyecon-எனும் செயலி வெளிவந்துள்ளது, இவற்றில்
உள்ள சிறப்பம்சம் பொறுத்தவரை மொபைல் நம்பரை வைத்து மற்றவர்களின் புகைப்படம் மற்றும் பல்வேறு தகவல்களை கொடுக்கும் திறமைக் கொண்டுள்ளது. இதுவரை Eyecon செயலியை பல்லாயிரக்கணக்கான மக்கள் உபயோகம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் பிளே ஸ்டோரில் Eyecon-எனும் செயலி பதிவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
அடுத்து இந்த செயலியில் மொழியை தேர்வு செய்ய வேண்டும், பின்பு நாடு மற்றும் உங்கள் மொபைல் நம்பரை பதிவிட வேண்டும்.
மேலும் நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்களுக்கு ஒடிபி அனுப்பிவைக்கப்படும், அதன்பின்பு Eyecon-செயலியில் உங்கள் புகைப்படம் மற்றும் பெயரை பதிவிட வேண்டும்.
பின்னர் Eyecon-செயலியில் search contacts-எனும் பகுதியில் உங்களுக்கு தேவைப்படும் நபரின் மொபைல் எண் கொடுத்து, அவரின் தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.
இந்த செயலியில் பேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற இணைப்புகள் இடம்பெற்றுள்ளன, இவற்றை பயன்படுத்தி கூட
மிக எளிமையாக தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.
No comments:
Post a Comment