இந்த ரயில் பெட்டிகள் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
இதில் செட் ரயில் ,கார் வகை கோச்சுடன் 16 சேர் உடையதாக இருக்கும். இது இரண்டு வகை வசதியுடன் வந்துள்ளது.அவை எக்ஸ்க்யூடிவ் மற்றும் நான்-எக்ஸ்க்யூட்டிவ் வகை வசதியுடன் ரயில் பெட்டிகள் இருக்கும்.
மொத்தம் 2 எக்ஸ்க்யூடிவ் கார்களும் ,14 நான்-எக்ஸ்க்யூடிவ் கோச்சுகளும் கொண்டதாக இருக்கும். இந்த கோச்சுகள் 160 கி.மீ வேகத்திலும் இயக்கப்பட கூடி வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் எக்ஸ்க்யூடிவ் கோச்சுகளில் மட்டும் 56 பயணிகளும், நான்-எக்ஸ்க்யூடிவ் கோச்களில் 78 பயணிகள் வரை அமரலாம்.
இதற்கு TRAIN 18 என்று பெயரிடப்பட்டுள்ளது,TRAIN 18 ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலால் தயாரிக்கப்பட்டுள்ளது.இது முழுக்க முழுக்க ஏசி வசதி செய்யப்பட்டது.தற்போது இந்த ரயில் அதிகபட்சம் 180 கி.மீ வேகத்தில் இயக்கி சோதனை செய்யவுள்ளது. TRAIN 18 தானியங்கி கதவுகளை கொண்டது.இது ரப்பர் மீது ரப்பர் ப்ளோர் எல்இடி லைட்டுகள் கொண்டுள்ளது.மேலும் இதில் பயோ-வேக்வம் டாய்லெட் வசதியும் செய்யப்பட்டுள்ளது.இதன் சிறப்பு இன்ஜின் இல்லாத இந்த ரயில், மிகவேகமாக பிக்அப் மற்றும் பிரேக் வசதி கொண்டது என்பதால்,இதில் பயண நேரம் மிச்சமாகும்.
No comments:
Post a Comment