"

Monday, February 26, 2018

மாடித் தோட்டம் அமையுங்கள்... காய்கறி பட்ஜெட்டை காணாமல் போக செய்யுங்கள்!!!

 காய்கறி விற்கும் சத்தம் கேட்டால் பார்த்துக் கொண்டு இருக்கும் வேலையை விட்டு ஓடி வந்து வாங்கும் பெண்கள் தான் அதிகம். காரணம். வீடு ஒரு இடத்தில் மார்க்கெட் ஒரு இடத்தில். அங்கு சென்று வாங்குவது என்றால் பெட்ரோல் விலையை நினைத்தால் அச்சம். அலைச்சலும் அதிகம். அட இனிமே அந்த பிரச்னையே இல்ல. இனி நீங்களே காய்கறிகளை அறுவடை செய்யலாம். எப்படிங்க? இப்படிதான்!
இன்று குடும்ப பட்ஜெட்டில் காய்கறிகள்தான் பெரிய இடத்தை பிடிக்கின்றன. காரணம். உற்பத்தி குறைவு... வாகன வாடகை என அனைத்தும் சராசரியான விலையில் கிடைக்க வேண்டிய காய்கறிகளின் விலையை ஜிவ்வென்று உயரத்திற்கு உயர்த்தி விட்டுள்ளன.
பொறியல், கூட்டு, சாம்பாரில் இரண்டு வகை காய்கறி என்று உணவை ருசித்து சாப்பிட்டவர்கள் உயர்ந்த விலை காரணத்தால் பொறியல், ஒற்றை காய்கறி போட்டு சாம்பார் என்று மாறிவிட்டனர். இந்த மாற்றத்தை மாற்றி தருகின்றனர்.
உங்கள் வீட்டு மொட்டை மாடியே போதும். உங்கள் குடும்பத்திற்கு தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளே நீங்கள்தான் என்கின்றனர். மாடியில் என்னங்க பயிரிட முடியும். என்ன பயிரிட முடியாது. கத்திரிக்காய், கீரை வகைகள், வெண்டைக்காய், அவரைக்காய், பாகற்காய் என்று இடவசதிக்கு ஏற்றார் போல் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றது போல் முதல் காய்கறி தோட்டத்தை அமைத்து தருகின்றனர்.
பசுமையான காய்கறிகள்... அதுவும் உங்கள் குடும்பத்திற்கு உங்கள் வீட்டிலேயே கிடைத்தால் உங்கள் மனது எப்படி குதூகலிக்கும். வாசனையான சாப்பாடு வீட்டினருக்கு கிடைத்தால் அவர்கள் மனம் எப்படி குளிரும். குறைந்த செலவு... நிறைந்த மகிழ்ச்சி என தரமான விதைகளை கொண்டு உயர்வான தோட்டத்தை அமைத்து அதை பராமரிக்கும் முறைகளையும் கற்றுத்தருகின்றனர்.
பசுமை கொஞ்சும் தோட்டத்தில் உலா வந்து சுத்தமான காற்றை சுவாசிப்பது எப்படி இருக்கும். மாடியில் தோட்டம் அமைப்பது வெப்பத்தையும் தடுக்கிறது. அப்புறம் என்ன உங்கள் வீட்டு பட்ஜெட்டில் காய்கறி என்ற காலமே இருக்காது.

No comments:

Post a Comment

Adbox