ஜனநாயக மறுமலர்ச்சி சங்கம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் மொத்தம் 29 மாநிலங்கள் உள்ளது. 7 ஒன்றியப் பகுதிகளும் உள்ளது. இந்த நிலையில், அதிக சொத்துக்கள் வைத்திருப்பவர்கள் பட்டியலை ஜனநாயக மறுமலர்ச்சி சங்கம் வெளியிட்டது. சொத்துக்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. இவரது சொத்து மதிப்பு ரூ.177 கோடி. இதன் மூலம் இந்தியாவின் பணக்கார முதலமைச்சர் என்ற இடத்தை சந்திரபாபு நாயுடு பெற்றுள்ளார்.
முதலமைச்சர்களிலேயே குறைவான சொத்து வைத்திருப்பவர்கள் பட்டியலில் திரிபுரா மாநில முதலமைச்சர் மாணிக்சர்கார் முதலிடம் பிடித்துள்ளார்.
இவரது சொத்து மதிப்பு ரூ.27 லட்சம் மட்டுமே. இதன் மூலம் இந்தியாவின் ஏழை முதலமைச்சர் என்ற இடத்தை மாணிக் சர்க்கார் பெற்றுள்ளார்.
ஜனநாயக மறுமலர்ச்சி சங்கம் வெளியிட்ட பட்டியலில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 12-வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.7,80,66,586. எடப்பாடி பழனிச்சாமியுடன் அசையும் சொத்தாக ரூ.3,14,16,006 ஆகவும், அசையா சொத்தாக ரூ.4,66,50,580 ஆகவும் உள்ளது. அதாவது எடப்பாடியின் மொத்த சொத்து மதிப்பு 7,80,66,586 ஆக உள்ளது.
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்டபோது, அவரது மனுவில் ரூ.3.67 கோடி ரூபாய் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் எடப்பாடியின் சொத்து மதிப்பையும், தற்போது ஜனநாயக மறுமலர்ச்சி சங்கம் வெளியிட்ட சொத்து மதிப்பையும் வைத்துப் பார்த்தால், எடப்பாடி பழனிசாமியின் சொத்து மதிப்பு சுமார் 116 சதவீதம் உயர்ந்துள்ளது.

No comments:
Post a Comment