"

Sunday, February 4, 2018

திருடப்படும் பயோமெட்ரிக் தகவல்கள்

 போலி ஆவணங்கள் தயார் செய்வதற்காக பயோ மெட்ரிக் தகவல்களை திருடிய ரேஷன் கடை ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து கிரைம் பிராஞ்ச் போலீஸ் துணை கமிஷனர் சர்வையா கூறுகையில், குற்றவாளிகள் 2 பேரும் சாப்ட்வேரை பயன்படுத்தி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவோரின் ரேஷன் கார்டு எண்கள், ஆதார் கார்டு எண்கள், பயோமெட்ரிக் கைரேகைகள் ஆகியவற்றை திருடி உள்ளனர். இந்த தகவல்களை பயன்படுத்தி அவர்கள் உணவு தானிய விற்பனைக்காக போலி ஆவணங்கள் தயார் செய்து வந்துள்ளனர். இந்த சாப்ட்வேரை அவர்கள் எங்கிருந்து வாங்கினார்கள், யார் இதை உருவாக்கியது, இவர்கள் இந்த தகவல்களை யாருக்கு விற்றனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

சூரத் போலீஸ் கமிஷனர் சதீஷ் சர்மா கூறுகையில், பயோமெட்ரிக் தகவல்களை சேகரித்து அவற்றை ரேஷன் கார்டுகளுடன் இணைக்கும் கான்ட்ராக்ட்களை சில நிறுவனங்களுக்கு குஜராத் அரசு வழங்கி உள்ளது. ஆனால் இந்த தகவல்கள் சிலரால் திருடப்பட்டு, சட்ட விரோதமாக விற்கப்படவும் வாய்ப்பு உள்ளது. இந்த தகவல்கள் ஆதார் கார்டுகள் மூலம் பெறப்பட்டவை அல்ல என தெரிவித்துள்ளார். மொத்தமாக திருடப்படும் இந்த தகவல்கள் ரூ.15,000 வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Adbox