"

Saturday, February 3, 2018

வாட்ஸ்ஆப்பில் தமிழில் பேசினாலே போதும் டைப் செய்ய தேவையில்லை.!


வாட்ஸ்ஆப் செயலி பொறுத்தவரை தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திவருகிறது, அதன்படி இப்போது வாட்ஸ்ஆப்பில் தமிழில் பேசினாலே போதும், அதுவே டைப் செய்யும் வசதியைக் கொண்டுவந்துள்ளது. மேலும் விரைவில் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி வாட்ஸ்ஆப் செயலிக்கு வழங்கப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும் இந்த பணம் பரிமாற்றம் செய்யும் வசதியை வங்கிகளுடன் இணைந்து வாட்ஸ்ஆப் ஏற்கனவே சோதனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்சமயம் வியாபாரம் செய்யும் மக்கள் மிகவும் அதிகம் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலியை அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ் ஆப் நிறுவனம். இந்த வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலி முக்கிய அம்சம் என்னவென்றால் வியாபாரம் செய்வோர் தங்களது வாடிக்கையாளர்களிடம் தகவல் பரிமாற்றம் செய்ய ஏதுவாக வெளியிடப்பட்டுள்ளது.
வழிமுறை-1:
முதலில் உங்கள் வாட்ஸ்ஆப்பில் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று language & input-எனும் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
வழிமுறை-2:
அடுத்து language & input-வழியே current keyboard-கிளிக் செய்தால் gboard-எனும் விருப்பத் தேர்வுசெய்து உள் நுழைய வேண்டும்.
வழிமுறை-3:
அதன்பின்பு gboard- அமைப்பில் இருக்கும் languages-கிளிக் செய்து தமிழ் இந்தியா ஏபிசி எனும் விருப்பத்தை தேர்வுசெய்ய வேண்டும்.
வழிமுறை-4:
மேலும் gboard-அமைப்பில் இருக்கும் வாய்ஸ் டைப்பிங்-ஐ கிளிக் செய்து தமிழ் (இந்தியா) விருப்பத்தை தேர்ந்தேடுத்தால் மிக எளிமையாக வாட்ஸ்ஆப்பில் தமிழில் பேசினாலே போதும் டைப் செய்ய தேவையில்லை.

No comments:

Post a Comment

Adbox