ஒயின் மருத்துவத்திலும் அழகியலிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தினசரி அல்லது அவ்வப்போது அளவான ஒயின் குடித்தால் பல நன்மைகளைப் பெற முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
வயதாவதால் ஏற்படும் மறதி பிரச்னைகளை ரெட் ஒயினில் உள்ள சமாசாரங்கள் தவிர்க்க உதவுமாம். டெக்சாஸ் மருத்துவ விஞ்ஞானிகள் எலி பரிசோதனை செய்தபோது, இது நிரூபணம் ஆகியிருக்கிறது.
முத்து போன்ற பற்கள் வேண்டுமெனில், ரெட் ஒயினைக் குடியுங்கள். ரெட் ஒயின் பற்களின் எனாமலை இறுக்கமடையச் செய்து, இதனால் பற்கள் சொத்தை அடைவதைத் தடுப்பதோடு, பாக்டீரியாக்களின் வளர்ச்சியையும் தடுக்கும்.
மேலும், ரெட் ஒயினில் உள்ள வேதிப்பொருள் கொழுப்பு செல்களை உருவாக்கும் இன்சுலின் திறனை சிறப்பாகத் தடை செய்கிறது.
இதேபோல் ரெட் ஒயினில் உள்ள piceatannol வேதிப்பொருளினால் இதய மற்றும் நரம்புத் தளர்ச்சி உள்ளிட்ட நோய்களும் தடுக்கப்படுகிறது. இது புற்றுநோயிலிருந்தும் காக்கிறது என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
சில வகை புற்றுநோய்களை ரெட் ஒயின் தடுக்கும் எனக் கூறப்பட்டாலும், Alcohol and Alcoholism ஆய்வு இதழ் அடுத்த அதிர்ச்சியை அளிக்கிறது. வேறு சில புற்றுநோய்களை உண்டாக்கும் தன்மை ரெட் ஒயினுக்கு உண்டாம். குறிப்பாக மார்பகப் புற்றுநோய்.
No comments:
Post a Comment