"

Wednesday, February 21, 2018

1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்

ஜூலை 1 ம் தேதி முதல் 13 இலக்க மொபைல் எண்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.மொபைல் போன் பயன்படுத்துவோருக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குவதற்காக மொபைல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 13 இலக்க எண்களை வழங்கும்படி அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களையும், தொலை தொடர்புத்துறை அறிவுறுத்தி உள்ளது.இதன்படி, புதிதாக மொபைல் எண் வாங்குவோருக்கு ஜூலை 1 முதல் 13 இலக்க எண்கள் வழங்கப்படும். தற்போது 10 இலக்க மொபைல் எண்கள் பயன்படுத்துவோர் இந்த ஆண்டு அக்டோபர் 1 முதல் 13 இலக்க எண்களுக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். 10 இலக்க எண்கள் பயன்படுத்துவோர், இந்த ஆண்டு டிசம்பர் 31 ம் தேதிக்குள் தங்களின் மொபைல் எண்ணை 13 இலக்கத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
13 இலக்க எண்ணாக மாற்றுவதற்கான காலக்கெடு டிசம்பர் 31 ஒன்றுடன் முடிவடைகிறது.13 இலக்க மொபைல் எண்களை அறிமுகம் செய்வதற்கான பணிகள் டிசம்பர் 8 ம் தேதி துவங்கி நடைபெற்று வருவதாக பிஎஸ்என்எல் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Adbox