ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மற்றொரு வீரர் மற்றும் கிராம மக்கள் காயமடைந்தனர்.
இந்நிலையில், வீரமரணம் அடைந்தவர் பிஎஸ்எப் 78 வது பட்டாலியனில் பணிபுரிந்த தமிழகத்ததில் தர்மபுரி மாவட்டம் பண்டார செட்டிபட்டியை சேர்ந்த சுரேஷ் என தெரியவந்துள்ளது. கடந்த 1976 ல் பிறந்த அவர், 1995ல் எல்லை பாதுகாப்பு படையில் சேர்ந்தார். அவருக்கு 13 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

காஷ்மீரில் இந்தியா அளித்த பதிலடியில், 4
பாக்.,வீரர்கள் கொல்லப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காஷ்மீரின் ஆர்எஸ் புரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் தமிழகத்தை சேர்ந்த வீரர் சுரேஷ் என்பவர் வீரமரணம் அடைந்தார்.
மேலும் மற்றொரு வீரர், கிராம மக்கள் சிலர் காயமடைந்தனர்.
அத்துமீறலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாகிஸ்தான் நிலைகளை நோக்கி கடுமையாக தாக்க துவங்கினர். இதில் 3 முதல் 4 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 4 நிலைகள் சேதப்படுத்தப்பட்டதாக பிஎஸ்எப் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சியால்கோட் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment