நடிகர் விஷாலின் செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டு தயாரிப்பாளர்
சங்கத்தில் பிரச்சனை கிளம்பியுள்ளது. இந்நிலையில், அது நடிகர் சங்கத்திலும்
எதிரொளித்திருப்பதாக தெரிகிறது. நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவி வகித்து
வந்த நடிகர் பொன்வண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துகொள்வதாக கடிதம்
வழங்கி உள்ளார்.
முன்னதாக சரத்குமார், ராதாரவி ஆகியோரின்
செயல்பாடுகளில் உள்ள பிரச்சனைகளை முன்னிறுத்தி விஷால், கார்த்தி, நாசர்,
பொன்வண்ணன் ஆகியோர் தனி அணியாக நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டனர்.
இந்தத் தேர்தலில் விஷால் தலைமையிலான அணி அமோக வெற்றிபெற்றது. பின்னர்,
நடிகர் சங்கக் கட்டிட வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வந்தன.
இந்நிலையில், சொந்தக் காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்வதாக பொன்வண்ணன்
கடிதம் வழங்கியுள்ளார். ஆனாலும், இதனை தற்போது வரை நடிகர் சங்கத்தில்
ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. இருந்தபோதிலும், ராஜினாமா செய்வதில்
இருந்து தனது மனநிலையை பொன்வண்ணன் மாற்றிக் கொள்ளவில்லை என்றே
சொல்லப்படுகிறது.
No comments:
Post a Comment