இந்த உலகில் படைக்கப்பட்ட உயிரிணங்கள்.. பிறப்பு, இறப்பு... என
அனைத்துமே நமக்கு ஆச்சரியமளிக்க கூடியவை தான்..! இதனை பற்றி எல்லாம்
யோசித்து பார்த்தால் நமக்கு தலை சுற்றி போய்விடும்.. ஆனால் இவை அத்தனையுமே
அறிவியலின் அடிப்படையில் தான் இயங்குகிறது..!
நாம் வாழும் பூமியானது
தன்னை தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றுகிறது என்பதும், இதனால்
தான் இரவு பகல் மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒரு
விஷயம் தான். ஆனால் இந்த பூமி திடீரென சுற்றுவதை நிறுத்தினால் என்னவாகும்
என்பது பற்றி என்றாவது கற்பனை செய்து பார்த்துள்ளீர்களா?
மேற்கிலிருந்து
கிழக்கு நோக்கி மணிக்கு சுமார் 1670 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றும்
பூமியானது திடீரென்று தனது சுழற்சியை நிறுத்தினால், பூமியில் நிலையாக
பிணைக்கப்படாத அத்தனை உயிரனங்கள் மற்றும் பிற பொருட்கள் அத்தனையும் மணிக்கு
சுமார் 1670 கிலோ மீட்டர் வேகத்தில் தூக்கி எறியப்படும்.அதாவது ஒரு
நிமிடத்திற்கு 28 கிலோ மீட்டர் வேகத்திலும், ஒரு வினாடிக்கு சுமார் அரை
கிலோ மீட்டர் வேகத்திலும் நம்மை ஒரு பொருளின் மீது வீசி எறிந்தால் அதன்
விளைவு எவ்வளவு மோசமானதாக இருக்கும் என சற்று யோசித்துப் பாருங்களேன்..!கடல்
நீரும் பூமியுடன் முழுமையாக பிணைக்கப்பட்டிருக்கவில்லை...! எனவே பூமி
திடிரென தனது சுழற்சியை நிறுத்துவதால் உண்டாகும் விளைவானது ஒரு மிகப்பெரிய
சுனாமியை ஏற்படுத்தும். இது சுமார் 1670 கிலோ மீட்டர் வேகத்தில் 28 கிலோ
மீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு மிகப்பெரிய தீவை கூட ஒரு நிமிடத்தில்
கடலுக்குள் மூழ்க செய்துவிடும் அளவிற்கு வேகமாகவும், மிக பெரியதாகவும்
இருக்கும். இதனால் நிலத்தில் வாழும் ஒரு உயிர் கூட மிஞ்ச முடியாது...!பூமி
தன்னை தானே சுற்றுவதை நிறுத்திய போதிலும் சூரியனை சுற்றுவது தொடர்ந்து
நடந்து கொண்டே தான் இருக்கும். எனவே வருடத்தின் முதல் ஆறு மாதங்கள்
முற்றிலுமாக இருளிலும், அடுத்த ஆறு மாதங்கள் முற்றிலுமாக பகலாகவும் தான்
இருக்கும். இதனால் ஒரு வருடத்தில் உள்ள 367 நாட்களும் ஒன்று சேர்ந்து, 8760
மணி நேரம் கொண்ட ஒரே ஒரு நாளாக தான் இருக்கும்.
தொடந்து ஆறு மாதங்களாக
சூரியனை நோக்கி இருக்கும் பகுதிகளில், வெப்பநிலை நாம் நினைத்து கூட பார்க்க
முடியாத அளவுக்கு அதிகமான வெப்பநிலை இருக்கும். இதனால் தொடந்து ஆறு
மாதங்கள் வெயிலில் இருக்கும் பகுதிகள் வெப்பநிலை அதிகரித்து வறண்ட பாலை
வனமாகவும், தொடந்து ஆறு மாதங்கள் இருளில் இருக்கும் பகுதிகள் பனிப்பொழிவு
அதிகரித்து பனிப் பிரசேதங்களாகவும் தான் இருக்கும்.இந்த சூழ்நிலை
மாற்றங்களை தாங்க முடியாமல் நுண்ணுயிரிகள் கூட முற்றிலுமாக அழிந்துவிடும்.
சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவதற்கு பதிலாக, மேற்கில் தோன்றி
கிழக்கில் மறையும். அதுமட்டுமின்றி இந்த வினோதமான நிகழ்வானது ஆண்டுக்கு ஒரு
முறை மட்டுமே நிகழும்..!திடிரென சுழற்சியை நிறுத்துவதினால் வழிமண்டலத்தில்
ஏற்படும் மாற்றத்தினால் வீசும் காற்றின் வேகமானது ஒரு மிகப்பெரிய
அணுகுண்டு வெடிப்பினை விட பல மடங்கு வலிமையானதாக இருக்கும். இதனால்
மிகப்பெரிய கட்டிடங்கள் கூட இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து போகும்.பூமி
தன்னை தானே சுற்றுவதை நிறுத்திய அடுத்த நொடியே, பூமியை சுற்றியுள்ள
பாதுகாப்பு காந்த மண்டலம் செயலிழந்து போய்விடும். இதனால் சூரியனிடம்
இருந்து வரும் புற ஊத கதிர்களினால் பூமியில் இருக்கும் மீத உயிர்களும்
முற்றிலுமாக அழிந்துவிடும்...!
No comments:
Post a Comment