"

Sunday, December 3, 2017

வங்கக் கடலில் குறைந்த தாற்றழுத்தத் தாழ்வு நிலை

வங்கக் கடலில் குறைந்த தாற்றழுத்தத் தாழ்வு நிலையால் கனமழை நீடிக்கும் என்பதால், சென்னை, காஞ்சிபுரம் மீனவர்கள் நாளை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வங்கக் கடலில் உருவான ஓகி புயல் அரபிக் கடலுக்கு சென்றுவிட்டது. ஆனால் ஓகி புயல் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
மீன்பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் நிலை என்ன என்பது இன்னமும் உறுதியாக தெரியவில்லை. இந்த நிலையில் வங்க கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலையானது வலிமையான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதனிடையே வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளதால் சென்னை மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மீனவர்களுக்கு ஒலிபெருக்கிகள் மூலம் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.
இதேபோல் காஞ்சிபுரம் மாவட்ட மீனவர்களும் நாளை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள கொட்டிவாக்கம் முதல் கடப்பாக்கம் வரை உள்ள 87.2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடற்கரை சார் மீனவர்களுக்கும் மீன்பிடி படகு உரிமையாளர்களுக்கும் முக்கிய அறிவிப்பு:
இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின் படி வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத் தாழ்வு நிலையினால்வ் அரும் 4.12.17 முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்தத் தாழ்வுநிலை தீவிரமடையும் போது கடல் சீற்றத்துடன் இருக்கும் என்பதாலும் கடல் காற்று அதிவேகமாக வீசக்கூடும் என்பதாலும் மழை பொழிவு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாலும் மீனவர்கள் யாரும் திங்கள்கிழமை முதல் அடுத்த நான்கு நாக்டளுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீடிக்கும் என்பதால், சென்னை, காஞ்சிபுரம் மீனவர்கள் நாளை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Adbox