பொதுவாக நம்முடைய உடலில் மெட்டபாலிசம் சீராக இருக்கும்போது உடலில் எந்தவித கழிவுகளும் சேராமல் வெளியேறும்.
இதற்கு நம்முடைய உணவுமுறை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
அப்படி நம்முடைய மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் கழிவுகளை வெளியேற்றி எடை குறைக்க உதவும் டீடாக்ஸ் பானங்கள் எடுப்பது அவசியமாகும்.
அப்படியான டீடாக்ஸ் (detox) பானங்கள் என்ன என்பதை பார்ப்போம்.
வெட்டிவேர் நீர்
Photograph: Vikas Choudhry
இரண்டு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு வேட்டிவேரை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வேண்டும்.
நன்கு கொதித்ததும் ஆறவிட்டு காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். இது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி எடையை குறைப்பதற்கு மிகச்சிறந்த பானம்.
கொத்தமல்லி நீர்
இரண்டு ஸ்பூன் கொத்தமல்லி விதைகளை இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு இதை ஆறவிடவும். இரவு முழுக்க அப்படியே குளிர வைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் எழுந்ததும் இந்த நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். இதை தொடர்ந்து செய்து வருவதால் உடலில் உள்ள பித்தம் சமநிலைப்படும். உடலில் தேங்கியிருக்கும் கொலஸ்டிரால் குறைந்து எடை குறையும்.
சீரக எலுமிச்சை நீர்
இரவில் ஒரு ஸ்பூன் சீரகத்தை ஒன்றரை டம்ளர் தண்ணீரில் இரவு முழுக்க ஊற வைக்க வேண்டும்.
காலையில் எழுந்ததும் அந்த தண்ணீரை சீரகத்துடன் சேர்த்து கொதிக்க வேண்டும். பின் அதை வடிகட்டி அந்த நீரை காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றி, கொலஸ்டிராலைக் குறைக்கிறது.
இலவங்கப்பட்டை தேன் குடிநீர்
ஒரு 2 இன்ச் அளவுக்கு உள்ள பட்டையை எடுத்து ஒன்றரை டம்ளர் தண்ணீரில் இரவு போட்டு ஊறவிடுங்கள்.
காலையில் எழுந்ததும் அந்த நீரை கொதிக்க வைத்து ஒரு டம்ளராக சுண்ட விட்டு, பின் அதனுடன் சிறிது தேன் சேர்த்து வெறும் வயிற்றில் குடித்து வர வேகமாக எடை குறைய ஆரம்பிக்கும்.
வெந்தய நீர்
தினமும் இரவில் தூங்கச் செல்லும்முன் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஊறவிடுங்கள்.
காலையில் எழுந்ததும் இந்த நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்து வர உடலில் உள்ள கழிவுகள் வியர்வை, சிறுநீர் ஆகியவற்றின் வழியே வெளியேறுவதோடு உடலில் உள்ள கெட்ட கொழுப்பும் கரைந்து உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
No comments:
Post a Comment