Smart Band Aid
உலகில் நாள்தோறும் புதுப்புது கண்டுபிடிப்புகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.சமீபத்தில் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது ஸ்மார்ட் பேண்டேஜ்கள். அடிபட்டால் காயத்தின் மீது போட்டு கொள்ளும் வகையில் இந்த ஸ்மார்ட் பேண்டேஜ் உருவாகியுள்ளனர். ஸ்மார்ட் பேண்டேஜ், காயங்களை வெகுவிரைவில் குணமாக்கவல்லது என கூறப்படுகிறது. பாக்டீரியாவின் தன்மைகேற்ப ட்ராபிக் சிக்னலை போல, 3 வண்ணங்களில் மாறி, காயங்களை குணமாக்கும் இந்த ஸ்மார்ட் பேண்டேஜ்கள் என்பது இதன் தனி சிறப்பு.
காயத்தின் மீது போடப்படும் ஸ்மார்ட் பேண்டேஜ் பச்சை நிறத்தில் காட்சியளித்தால் குறைவான பாக்டீரியா தொற்று உள்ளது என்று பொருள்.
அதுவே ஸ்மார்ட் பேண்டேஜ் மஞ்சள் நிறமாக மாறிவிட்டால் சற்று அதிகமான பாக்டீரியா தொற்று காயத்தில் உள்ளது. இந்த தொற்று antibiotic மருந்துகளால் கட்டுப்படுத்தக்கூடிய அளவில் தான் உள்ளது என்பதை காட்டுகிறது.
ஸ்மார்ட் பேண்டேஜ் சிவப்பு நிறத்தில் மாறிவிட்டது என்றால் காயத்தில் antibiotic மருந்துகளால் எளிதாக கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பாக்டீரியாவின் வீரியம் மிக அதிகமாக உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் இருந்தால் பேண்டேஜில் கொடுக்கப்பட்டுள்ள ஆண்டியாடிக் மருந்து, காயத்தில் தொற்றியுள்ள பாக்டீரியா மீது வேலை செய்து அதனை அழித்து விடும். அதுவே சிவப்பு நிறத்தில் இருந்தால், காயத்தின் மீது சக்தி வாய்ந்த ஒளியை பாய்ச்சி Reactive oxygen species என்னும் ரசாயனத்தை வைத்து பாக்டீரியாக்களின் வீரியத்தை குறைத்து விடலாம். பின்னர் ஸ்மார்ட் பேண்டேஜ்களை காயத்தில் ஒட்டி வீரியம் குறைக்கப்பட்ட பாக்டீரியாக்களை அழித்துவிடலாம் என்று கூறியுள்ளனர் விஞ்ஞானிகள்.
No comments:
Post a Comment