"

Wednesday, January 22, 2020

கசகசாவின் மருத்துவ பயன்கள் என்னென்ன என்று தெரியுமா..?

கசகசாவின் மருத்துவ பயன்கள் என்னென்ன என்று தெரியுமா..?

கசகசா பத்து கிராம் எடுத்து மாதுளம் பழச்சாற்றில் ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் தூக்கமின்மை பிரச்னை தீரும்.


கசகசா, சாலாமிசிரி, பூனைக்காலி விதை, மூன்றையும் தலா நூறு கிராம் எடுத்து அரைத்துக்கொள்ளவும். இதில் ஐந்து கிராம் பொடியை தினமும் இரவில் பாலில் கலந்து குடித்து வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.



கசகசா, முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு தலா நூறு கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் பொடியை காலை, மாலை சாப்பிட்டு வந்தால் உடல் வலுப் பெறும்.



கசகசா, மாம்பருப்பு, இரண்டையும் விழுதாக அரைத்து பத்து கிராம் அளவை காலை, மாலை இரு வேளையும் தயிருடன் கலந்து சாப்பிட்டால் ரத்த பேதி, சீத பேதி போன்றவை குணமாகும். கசகசா, முந்திரிப் பருப்பு இரண்டையும் சம அளவு எடுத்து பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும். முகம் அழகு பெறும்.



கசகசா, துத்தி இலை இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து, கால் மூட்டுகளில் பற்றுப்போட்டால் மூட்டு வலி உடனே குணமாகும்.



கசகசா,வாழைப்பூ, மிளகு, மஞ்சள் அனைத்தையும் சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடித்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.



கசகசா, ஜவ்வரிசி, பார்லி மூன்றையும் தலா பத்து கிராம் எடுத்து பச்சரிசியுடன் சேர்த்துக் கஞ்சி காய்ச்சிக் குடித்தால் இடுப்பு வலி குணமாகும்.



கசகசாவை முள்ளங்கிச் சாற்றில் ஊற வைத்து அரைத்து,தேமல்,படர்தாமரை உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் அவை விரைவில் குணமாகும்.



கசகசா, மிளகு, மிளகாய் மூன்றையும் பொன்னாங்கண்ணி கீரையில் போட்டுக் கடைந்து சாப்பிட்டால் கண் பார்வை கூர்மையாகும்.


கசகசா, ஓமம், மாம்பருப்பு, மாதுளைத் தோல், சுண்டைக்காய் வற்றல் தலா 50 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும். இதில் ஐந்து கிராம் எடுத்து கெட்டித் தயிரில் கலந்து சாப்பிட்டால் சீத பேதி உள்ளிட்ட அனைத்து வகையான பேதியும் உடனே நிற்கும்.


கொத்துமல்லி இருபது கிராம், கசகசா மூன்று கிராம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.



மாதுளம் பழச் சாற்றில் கசகசாவை ஊற வைத்து தினமும் ஒரு கிராம் அளவிற்கு சாப்பிட்டு வந்தால் சக்தி அதிகரிக்கும்.



கசகசாவை தேங்காய்ப் பாலில் ஊற வைத்துச் சாப்பிட்டால் வயிற்றுப் புண் குணமாகும்.

No comments:

Post a Comment

Adbox