கடந்த டிசம்பர் 3ம் தேதி ஏர்டெல், வோடபோன் ஆகிய இரு நிறுவனங்கள் தங்கள் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருந்தது. அந்த திட்டத்தில் இருந்து, மற்ற நெட்வொர்க்கிற்கான அவுட்கோயிங் கால்கள் குறித்த வரம்பைத் தளர்த்தியுள்ளதாக கடந்த டிசம்பர் 6ம் தேதி அறிவித்தது. டிசம்பர் 6ம் தேதி ஜியோ தனது புதிய கட்டணத்தை வாடிக்கையாளர்களுக்கு நடைமுறைபடுத்தியது.
பாரதி ஏர்டெல், தனது ட்வீட்டில், 'நாங்கள் உங்களைக் கேட்டோம்! நாங்கள் மாற்றத்தை செய்கிறோம். நாளை முதல், இந்தியாவில் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற அழைப்பை அனுபவிக்கலாம். எந்த நிபந்தனைகளும் உங்களுக்கு கிடையாது.' பதிவு செய்துள்ளது.
வோடபோனும் தனது ட்விட்டர் பக்கத்தில்' இலவசத்திற்கு இலவசம் என்று தான் பொருள்' என்று ரிலையன்ஸ் ஜியோவை கவுண்ட்டர் கொடுக்கும் வகையில் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளது.
Enjoy free unlimited calls to everyone. More reasons for you to rejoice for being on your favourite network.
234 people are talking about this
No comments:
Post a Comment