வாட்ஸ்ஆப் பேமெண்ட் இன்னும் இரண்டு மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது ஆர்பிஐயின் அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாட்ஸ்ஆப்பை பொறுத்தவரை பிற நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில்தான் அதிகம் பேர் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்ஆப் உலகம் முழுவதும் 150 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். இதில் இந்தியாவில் மட்டும் 40 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் தற்போது பேமெண்ட் சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டால் வாட்ஸ்ஆப்பில் எப்படி வீடியோ, படங்களைப் பகிர்கிறோமோ அதேபோல், நமது வங்கியில் இருந்து பணத்தை நம் நண்பர்களுக்கு அனுப்பமுடியும். அதாவது இந்த சேவையானது நமது வங்கிக்கும், நாம் அனுப்பும் நண்பருடைய வங்கிக்கும் இடையே பணத்தை பரிமாற்றம் செய்யும் ஒரு இடைத்தரகர் போல் செயல்படும்.
பயனாளர் தகவல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் டிஜிட்டல் வர்த்தக கொள்கைகள் மற்றும் வழிமுறைகளை உருவாக்கவேண்டும் என இந்திய அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. அதன்படி ரிசர்வ் வங்கியிடம் இருந்து இதற்காக ஓப்புதல்கள் வாங்கும் பணி தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.
வாட்ஸ் ஆப்பில் இந்த பேமெண்ட் வசதி யுபிஐ அடிப்படையில் அறிமுகமாவுள்ளது. தற்போது சோதனை அடிப்படையில் இந்தியாவில் 10 லட்சம் பீட்டா வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே கூகுள் பே, பேடிஎம் போன்ற பேமெண்ட் வசதிகள் இருந்தாலும் வாட்ஸ்ஆப் பேமெண்டிற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
No comments:
Post a Comment