"

Monday, September 9, 2019

நரை முடியை இயற்கையான முறையில் கருமையாக்க, எளிய முறையில் நேச்சுரல் ஹேர் Natural Hair Dye தயாரிப்பது எப்படி

ளநரை பிரச்சினை இன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. இந்த இளநரை மறைப்பதற்காக பல்வேறு ரசாயன கழிவுகளை பயன்படுத்தும்போது நம்மில் பலருக்கு ஒவ்வாமை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.வீட்டிலேயே இயற்கை முறையில் ஹேர் டை (Natural Hair Dye) தயாரிக்கலாம். இதில் எவ்வித ரசாயனமும் இன்றி, முழுவதும் இயற்கை மூலிகைகளால், நீங்களே வீட்டில் தயாரிப்பது என்பதால் எவ்வித அச்சமும் இன்றி, ஆண், பெண் பேதமின்றி எந்த வயதினரும் இதை பயன்படுத்தலாம். 



கறிவேப்பிலை பொடி, துளசி பொடி, செம்பருத்தி பொடி, கடுக்காய் பொடி, அவுரி இலை பொடி, மருதாணி பொடி இத்துடன் சிறிதளவு டீ டிகாக்ஸன்.மேற்கண்ட பொடிகளை தலா ஒரு ஸ்பூன் அளவு இரும்பு கடாயில் எடுத்துக்கொண்டு, அவற்றுடன் சிறிதளவு, டீ டிகாக்ஸனை கலந்து, 4 - 5 மணி நேரம் ஊற வைக்கவும். முதல் நாள் இரவு கலந்து வைத்து மறு நாள் காலையிலும் இதை பயன்படுத்தலாம். சைனஸ் பிரச்னை இருப்போர், சிறிதளவு யூக்லிப்டாஸ் தைலத்தை கலந்துகொள்ளலாம். 

அவ்வளவுதான் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட நேச்சுரல் ஹேர் டை தயார். இதை, எண்ணெய் பிசுக்கு இல்லாத உலர்ந்த தலைமுடியில் தடவி, 1 - 2 மணி நேரம் கழித்து, வெறும் நீரில் தலைக்கு குளித்தால், நரை முடி மறைந்து, கருக்கறுப்பாக காணப்படும். இந்த கலவையை பயன்படுத்திய நாட்களில், ஷாம்பு அல்லது சிகைக்காய் பயன்படுத்தி குளிப்பதை தவிர்க்கவும். 



மேலும் இரண்டு நாட்களுக்குதலைக்கு வேறு எந்த ரசாயன கலவை எண்ணம் பயன்படுத்தாமல், வெறும் தேங்காய் எண்ணெய் மட்டும் பயன்படுத்தினால் நல்ல பலன் தரும். வாரம் ஒரு முறை இதை செய்து வந்தால், நாளடைவில், நிரந்தரமாவே நீங்கள் கருமை நிற கூந்தலை பெறலாம்.

No comments:

Post a Comment

Adbox