தேவையான பொருட்கள் :
புழுங்கல் அரிசி – 1 கப்
முருங்கைக்கீரை – 1/4 கப்
தேங்காய் பால் – 1 கப்
பால் – 1 கப்
பூண்டு – 10 பல்
இஞ்சி – 1 துண்டு
சீரகம் – 1 1/2 ஸ்பூன்
வெந்தயம் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முருங்கைக்கீரையை சுத்தம் செய்து வைக்கவும்.
பூண்டு, இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.
அரிசியை தண்ணீரில் சுத்தம் செய்து 1 கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வைக்கவும்.
கஞ்சிக்கு தேவையான அளவு உப்பு , பூண்டு, சீரகம், வெந்தயம், பால் கால் கப் சேர்த்து வேகவிடவேண்டும்.
கஞ்சி கெட்டியாக சோறு பதத்தில் வெந்து இருப்பதால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மீதமுள்ள பால், முருங்கை இலை, ஆகியவற்றை கலந்து வேகவிட்டு இறக்கினால் வாயுக்கஞ்சி ரெடி.
No comments:
Post a Comment