"

Saturday, September 21, 2019

வரலாற்றில் இன்று செப்டம்பர் 21 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்


வரலாற்றில் இன்று செப்டம்பர் 21 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக

நிகழ்வுகள்
1792 – பிரான்சில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது.
1860 – இரண்டாம் ஓப்பியம் போர்: ஆங்கிலேய, பிரெஞ்சுப் படைகள் சீனப் படைகளைத் தோற்கடித்தன்னர்.
1896 – பிரித்தானியப் படைகள் சூடானின் டொங்கோலா நகரைக் கைப்பற்றினர்.
1921 – ஜெர்மனியில் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற பெரும் வெடி விபத்தில் சிக்கி ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
1934 – ஜப்பானில் மேற்கு ஹொன்சூ என்ற இடத்தில் இடம்பெற்ற சூறாவளி காரணமாக 3,036 பேர் கொல்லப்பட்டனர்.
1938 – நியூ யோர்க்கின் லோங் தீவில் சூறாவளி காரணமாக 500 முதல் 700 வரையானோர் கொல்லப்பட்டனர்.
1939 – ருமேனியாவின் பிரதமர் ஆர்மண்ட் கலினெஸ்கு தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1942 – மேற்கு உக்ரைனில் 2500 யூதர்கள் நாசிகளினால் கொல்லப்பட்டனர்.
1964 – மோல்டா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
1972 – பிலிப்பீன்ஸ் அதிபர் பேர்டினண்ட் மார்க்கொஸ் முழு நாட்டிலும் இராணுவ ஆட்சியைப் பிறப்பித்தார்.
1981 – பெலீஸ், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
1989 – இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜினி திரணகம யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1990 – மட்டக்களப்பு ஆரையம்பதியில் புதுக்குடியிருப்பு கிராமத்தில் 17 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1991 – ஆர்மேனியா, சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
1995 – விநாயகரின் சிலைகள் பால் குடிப்பதாக வதந்தி பரப்பட்டது.
1999 – தாய்வானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,400 பேர் கொல்லப்பட்டனர்.
2001 – நாசாவின் டீப் ஸ்பேஸ் 1 விண்கலம் பொரெல்லி வால்வெள்ளிக்குக் கிட்டவாக 2,200 கிமீ தூரத்திற்குள் சென்றது.
2003 – கலிலியோ விண்கலத் திட்டம் இடைநிறுத்தப்பட்டு அது ஜுப்பிட்டர் கோளின் வளிமண்டலத்தினுள் அனுப்பப்பட்டு அதனுடன் மோதவிடப்பட்டது.
2004 – பூர்ஜ் துபாய் கட்டிட அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
பிறப்புக்கள்
1866 – எச். ஜி. வெல்ஸ், ஆங்கில எழுத்தாளர், (இ. 1946)
1909 – குவாமே நிக்ரூமா, கானா பிரதமர் (இ. 1972)
1954 – சின்சோ அபே, யப்பானிய அரசியல்வாதி
1957 – கெவின் ரட், ஆஸ்திரேலியாவின் 26வது பிரதமர்
1963 – கேட்லி அம்ப்ரோஸ், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் பந்தாளர்
இறப்புகள்
1971 – பெர்னார்டோ ஹுசே, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1887)
1989 – ராஜினி திரணகம, இலங்கையின் மனித உரிமை மற்றும் பெண் உரிமை செயற்பாட்டாளர் (1954)
2007 – விஜயன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
  2008 – டி. பி. விஜயதுங்கா, இலங்கையின் 4வது ஜனாதிபதி (பி. 1922)
சிறப்பு நாள்
உலக அமைதி நாள்
மோல்ட்டா – விடுதலை நாள் (1964)
பெலீஸ் – விடுதலை நாள் (1981)
ஆர்மேனியா – விடுதலை நாள் (1991)

No comments:

Post a Comment

Adbox