"

Tuesday, September 17, 2019

வரலாற்றில் இன்று செப்டம்பர் 17 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்

வரலாற்றில் இன்று செப்டம்பர் 17 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக


நிகழ்வுகள்
1630 – மசாசுசெட்ஸ், பொஸ்டன் நகரம் அமைக்கப்பட்டது.
1631 – ரோமப் பேரரசுடனான 30 ஆண்டுகள் போரில் சுவீடன் பிறைட்டென்ஃபெல்ட் என்ற இடத்தில் பெரும் வெற்றி பெற்றது.
1787 – ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு பிலடெல்பியாவில் கையெழுத்திடப்பட்டது.
1789 – வில்லியம் ஹேர்ச்செல் மைமாஸ் என்ற துணைக்கோளைக் கண்டுபிடித்தார்.
1795 – மேஜர் பிரேசர் என்பவனது தலைமையில் பிரித்தானியப் படைகள் மட்டக்களப்பை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.
1809 – பின்லாந்து போரில் சுவீடனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. பின்லாந்து ரஷ்யாவிடம் கையளிக்கப்பட்டது.
1858 – ஆழ்கடல் தொலைத்தந்திச் சேவை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேரிலாந்தில் கூட்டமைப்பினருக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் 4,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கனக்கானோர் காயமடைந்தனர். இதுவே அமெரிக்காவில் ஒரே நாளில் அதிக இரத்தக்களரியை ஏற்படுத்திய போராகும்.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: பென்சில்வேனியாவில் ஆயுதக்கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட பெரும் வெடி விபத்தில் சிக்கி 78 பேர் கொல்லப்பட்டனர்.
1908 – ஓர்வில் ரைட்டின் வானூர்தி தரையில் மோதியதில் அதில் பயணம் செய்த “தொமஸ் செல்ஃபிரிட்ஜ்” என்பவர் கொல்லப்பட்டார். விமான விபத்தில் உயிரிழந்த முதலாவது மனிதர் இவராவார்.
1928 – சூறாவளி தென்கிழக்கு புளோறிடாவைத் தாக்கியதில் 2,500 பேர் கொல்லப்பட்டனர்.
1929 – லித்துவேனியாவில் இடம்பெற்ற புராட்சி ஒன்றில் அதிபர் ஆகுஸ்டீனஸ் வொல்டெமாரெஸ் பதவியிழந்தார்.
1939 – சோவியத் ஒன்றியம் போலந்தின் மீது படையெடுத்து கிழக்குப் பகுதியைப் பிடித்தது.
1939 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய விமானம் தாங்கிக் கப்பல் ஒன்று ஜெர்மனியரால் தாக்கி அழிக்கப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: ரஷ்யாவின் பிறயான்ஸ்க் நகரம் நாசிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.
1949 – டொரோண்டோ துறைமுகத்தில் கனேடியக் கப்பல் ஒன்று எரிந்ததில் 118 பேர் கொல்லப்பட்டனர்.
1956 – ஆஸ்திரேலியாவில் முதன் முதலாக தொலைக்காட்சி காண்பிக்கப்பட்டது.
1974 – வங்காள தேசம், கிரெனடா, கினி-பிசாவு ஆகியன ஐநாவில் இணைந்தன.
1976 – நாசா தனது முதலாவது மீள் விண்ணோடமான எண்டர்பிறைசஸ் பற்றிய தகவல்களை வெளியிட்டது.


1978 – இஸ்ரேல், எகிப்து ஆகியன காம்ப் டேவிட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
1980 – போலந்தில் சொலிடாரிற்றி தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது.
1980 – நிக்கராகுவாவின் முன்னாள் அதிபர் அனாஸ்டாசியோ சொமோசா டெபாயில் பராகுவேயில் படுகொலை செய்யப்பட்டார்.
1991 – லினக்ஸ் இயங்குதளம் (0.01) இணையத்தில் கிடைத்தது.
1993 – கடைசி ரஷ்யப் படை போலந்தில் இருந்து வெளியேறியது.
1997 – பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
   2004 – இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
பிறப்புகள்
1879 – ஈ. வெ. ரா. பெரியார், திராவிடர் கழகத் தந்தை (இ. 1973)
1889 – வ. ரா., மணிக்கொடிக்கால எழுத்தாளர்
1897 – வில்லியம் கொபல்லாவ, இலங்கையின் ஆளுநர், முதலாவது ஜனாதிபதி (இ. 1981)
1906 – ஜே. ஆர். ஜெயவர்த்தனா, இலங்கையின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதி, (இ. 1996)
1930 – லால்குடி ஜெயராமன், வயலின் மேதை (இ. 2013)
1944 – ரைன் மெஸ்னர், இத்தாலிய மலையேறுநர்
   1950 – நரேந்திர மோடி, இந்திய அரசியல்வாதி
1974 – ரஷீத் வாலஸ், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள்
1665 – நான்காம் பிலிப், ஸ்பெயின், போர்த்துக்கல், இலங்கை மன்னன் (பி. 1605)
1948 – ரூத் பெனடிக்ட், அமெரிக்க மனிதவியலாளர் (பி. 1887)
  1959 – கு. வன்னியசிங்கம், இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் (பி. 1911)
1953 – திரு வி. க., தமிழறிஞர் (பி. 1883)
1979 – எம். ஆர். ராதா, தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (பி. 1907)
1994 – கார்ல் பொப்பர், ஆஸ்திரிய மெய்யியலாளர், (பி. 1902)
சிறப்பு நாள்
அங்கோலா – தேசிய வீரர்கள் நாள்

No comments:

Post a Comment

Adbox