பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள கணக்கு வைத்திருப்போர் தங்களது ஆதார் எண்ணையும் அத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு முதலாவதாக நீதிமன்றத்தில் எடுத்து வைத்தது. இது முற்றிலும் பயனாளர்களின் தனியுரிமையை பாதிக்கும் செயல் என பேஸ்புக் நிர்வாகம் தமிழக அரசின் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்தது.
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசேஞ்சர் ஆகியவற்ற அனைத்தையும் பேஸ்புக் நிறுவனமே வழங்குவதால் சமூக வலைதளத்தின் எந்தப் பக்கத்தில் கணக்கு இருந்தாலும் ஆதார் எண் இணைப்பு அவசியமாகிப் போகும். இவ்விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் வாதிட்ட தமிழக அரசு, போலி செய்திகள், வன்முறையைத் தூண்டும் பதிவுகள், தீவிரவாதப் பதிவு எனப் பல அபாயங்களை அரசு கண்டறிய வசதியாய் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்தது.
இந்நிலையில், மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கும் மட்டுமல்லாது காவல் ஆணையருக்கும் ட்விட்டர், ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கும் உச்ச நீதிமன்றம் கருத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதிக்கு முன்னராகப் பதிலளிக்கவும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment