"

Sunday, August 18, 2019

வாட்ஸ்ஆப்-ஆல்பம்ஸ், குரூப்டு ஸ்டிக்கர்ஸ்: வாட்ஸ்அப்-பில் விரைவில் புதிய வசதி

வாட்ஸ்ஆப் நிறுவனம் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டெஸ்க்டாப் பயன்படும் வகையில் அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி இப்போது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


ஆல்பம்ஸ் மற்றும் குரூப்டு ஸ்டிக்கர்ஸ் என்கிற இரண்டு புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம்.


வாட்ஸ்ஆப்-ஆல்பம்ஸ்:

வாட்ஸ்ஆப் ஆல்பம் என்பது, ஸ்மார்ட்போன் வழியாக ஒரே நேரத்தில் 30புகைப்படங்கள் வரையிலாக அனுப்பும் வகையிலான புதிய அப்டேட். அதன்படி, ஸ்மார்ட்போன் கேலரியில் இருந்து அதிகமான புகைப்படங்களை செலக்ட் செய்து அனுப்பலாம். இந்த அம்சம் வெப் வெர்ஷனிலும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்து உள்ளது.



குரூப்டு ஸ்டிக்கர்ஸ்:

குரூப்டு ஸ்டிக்கர்ஸ் அம்சம் பொறுத்தவரை ஆல்பம் அம்சத்தின் படி செயல்படக்கூடியது, அது என்னவென்றால், ஒரே வரிசையின் கீழ் இரண்டு ஸ்டிக்கர்களை ஒன்றாக அனுப்ப உதவும் ஒரு அம்சம் தான் குரூப்டு ஸ்டிக்கர்ஸ். இந்த இரண்டு புதிய அம்சங்கள் வாட்ஸ்அப்பில் விரைவில் எதிர்பார்க்கலாம்.



சமீபத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் கைரேகை ஸ்கேனர் வசதியை அறிமுகம் செய்தது. இது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதன் மூலம், உங்களின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அன்லாக் செய்வது போலவே வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்ற்குள் நுழைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Adbox