"

Thursday, July 25, 2019

உணவு பொருட்களில் நறுமணத்திற்கு மட்டும் அல்ல ஏலக்காய். உடல் நலனுக்கும் ஏலக்காய். ஏலக்காயில் உள்ள பல்வேறு மருத்துவ குணங்கள் என்னென்ன என்று தெரியுமா?


ணவுக்கு மேலும் சுவையூட்ட நறுமணப் பொருள்களைப் பயன்படுத்துகிறோம். நறுமணப் பொருள்களில் தனித்துவமானது ஏலக்காய். இனிப்புகள், தேநீர், காபி... எனப் பலவற்றிலும் உபயோகிக்கப்படுகிறது. ஏலக்காயை வெறும் நறுமணம்கூட்டும் பொருள் என்று மட்டும் நாம் வரையறுத்துவிட முடியாது. அதனுள் நிறைய மருத்துவக் குணங்களும் புதைந்துகிடக்கின்றன.ஏலக்காய் நமது உடல் மெட்டாபாலிசத்தை அதிகரித்து பித்த நீரை அதிகரித்து ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. எதுகளித்தல், வாய்வு தொல்லை போன்றவற்றை சரியாக்குகிறது.


பச்சை ஏலக்காய் 

தென்னிந்தியாவில் விளையும் இவ்வகை ஏலக்காய் நன்கு கொழுத்த பச்சை ஓடுகளைப் பெற்றிருக்கும். இதையே மிகச் சிறந்த தரமான வகை எனக் குறிப்பிடலாம். முழுதாகவும் பொடியாகவும் கிடைக்கும் இதன் ஓடு, நீண்ட நாள்களுக்கு வலுவாக இருப்பதால், விதைகளின் மணம் மாறாமல் இருக்கும். இது நறுமணத்துக்காகவும், இனிப்பு வகைகள் செய்வதற்கும் பயன்படும். 

காவி ஏலக்காய்

து, பச்சை ஏலக்காயைவிடப் பெரியதாகவும், ஓடுகளில் முடிபோன்ற அமைப்பையும் பெற்றிருக்கும். பார்ப்பதற்கு சிறிய தேங்காயைப்போல் தோற்றமளிக்கும். இதையும் நறுமணத்துக்காக பிரியாணி, கறி, கரம் மசாலா முதலியவற்றில் பயன்படுத்துவர். இதன் விதைகளில் உள்ள மாவுச்சத்து, புரதச்சத்து, ஈரப்பதம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இரும்புச்சத்துக்களால் நிறைய மருத்துவக் குணங்களைக் கொண்டிருக்கிறது.

மருத்துவ குணங்கள்

லக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும். விக்கலை போக்க இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் புதினா இலைகளை காய்ச்சி வடிகட்டி குடித்தாலே போதும்.

வெயிலில் அதிகம் அலைந்தால் உண்டாகும் தலைசுற்றலை போக்க நான்கைந்து ஏலக்காய்களை கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனைவெல்லம் போட்டு குடித்தால் உடனே நீங்கும்.
வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே போதும்.



ன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், 'ஏலக்காய் டீ' குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கலாம்.

நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.

பச்சை ஏலக்காய் விட கருப்பு ஏலக்காய் மிகவும் சிறந்தது. ஏலக்காய் உங்கள் உடலில் தங்கியுள்ள கொழுப்பை கரைக்கிறது. மேலும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

No comments:

Post a Comment

Adbox