"

Sunday, June 16, 2019

வரலாற்றில் இன்று ஜூன் 16 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்

வரலாற்றில் இன்று ஜூன் 16 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக

நிகழ்வுகள்
1745 – பிரித்தானியர் கேப் பிறெட்டன் தீவை பிரெஞ்சுப் படைகளிடம் இருந்து கைப்பற்றினர். இது தற்போது கனடாவின் ஒரு பகுதியாகும்.


1779 – ஸ்பெயின் பெரிய பிரித்தானியாமீது போரை அறிவித்தது. கிப்ரால்ட்டர் மீதான முற்றுகை ஆரம்பமானது.
1819 – குஜராத்தில் இடம்பெற்ற 8.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 2000 பேர் மாண்டனர்.
1883 – இங்கிலாந்தில் விக்டோரியா அரங்கில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 183 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
1897 – ஹவாய்க் குடியரசை ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கும் உடன்பாடு எட்டப்பட்டது.
1911 – விஸ்கொன்சின் மாநிலத்தில் 772 கிராம் விண்கல் வீழ்ந்ததில் களஞ்சியம் ஒன்று சேதமடைந்தது.
1940 – லித்துவேனியாவில் கம்யூனிச ஆட்சி உருவானது.
1963 – உலகின் முதலாவது பெண் விண்வெளி வீரர் ரஷ்யாவின் வலன்டீனா டெரெஷ்கோவா வஸ்தோக் 6 விண்கலத்தில் பயணமானார்.
1976 – தென்னாபிரிக்காவில் சுவெட்டோவில் 15,000 கறுப்பின மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காவற்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 566 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
1964 – லியோனிட் பிரெஷ்னேவ் சோவியத் ஒன்றியத்தின் அதிபரானார்.
1983 – யூரி அந்திரோப்பொவ் சோவியத் ஒன்றியத்தின் அதிபரானார்.
1994 – சீன விமானம் TU-154 புறப்பட்டுப் 10 நிமிடங்களில் வெடித்ததில் 160 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1971 – டூபாக் ஷகூர், அமெரிக்காவின் ராப் இசைக் கலைஞர்
இறப்புகள்
1925 – சித்தரஞ்சன் தாஸ், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1870)
சிறப்பு நாள்
தென்னாபிரிக்கா – இளைஞர் நாள் (1976).

No comments:

Post a Comment

Adbox