"

Tuesday, June 11, 2019

வரலாற்றில் இன்று ஜூன் 11 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்

வரலாற்றில் இன்று ஜூன் 11 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக

நிகழ்வுகள்
1774 – அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜியேர்சில் இருந்து பிரெஞ்சு இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி யூதர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
1788 – ரஷ்ய நாடுகாண் பயணி கெராசிம் இஸ்மாயிலொவ் அலாஸ்காவை அடைந்தார்.
1805 – மிச்சிகனில் டிட்ராயிட் நகரத்தின் பெரும் பகுதி தீயில் அழிந்தது.
1837 – பொஸ்டனில் ஆங்கிலேயர்களுக்கும் ஐரிய மக்களுக்கும் இடையில் கலவரம் மூண்டது.
1901 – நியூசிலாந்து தன்னுடன் குக் தீவுகளை இணைத்துக் கொண்டது.
1935 – அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரான எட்வின் ஆர்ம்ஸ்ட்ரோங் உலகின் முதலாவது தனது பண்பலை ஒலிபரப்பை நியூ ஜேர்சியில் அறிமுகப்படுத்தினார்.

1937 – சோவியத் ஒன்றியத்தில் எட்டு இராணுவத் தலைவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1938 – இரண்டாம் சீன-ஜப்பானியப் போர்: ஜப்பானியப் படைகளை எதிர் கொள்ள சீன அரசு மஞ்சள் ஆற்றை பெருக்கெடுக்க விட்டதில் 500,000 முதல் 900,000 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய விமானங்கள் இத்தாலியில் ஜெனோவா மற்றும் டூரின் நகர்கள் மீது குண்டுகளை வீசின.
1940 – இரண்டாம் உலகப் போர்: மால்ட்டா மீது முதற் தடவையாக இத்தாலிய விமானங்கள் தாக்குதலை நடத்தின.
1963 – தெற்கு வியட்நாமில் மத விடுதலையை வலியுறுத்தி திக் குவாங் டுக் என்ற பௌத்த மதகுரு தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்து கொண்டார்.
1981 – ஈரானில் 6.9 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 2,000 வரையில் கொல்லப்பட்டனர்.
2002 – அன்டோனியோ மெயூச்சி என்பவரே தொலைபேசியை முதன் முதலில் கண்டுபிடித்தவர் என ஐக்கிய அமெரிக்கக் காங்கிரசினால் அறிவிக்கப்பட்டார்.
2004 – நாசாவின் கசீனி-ஹியூஜென்ஸ் விண்ணுளவி சனிக் கோளின் ஃபீபி துணைக்கோளை அண்டிச் சென்றது.
2007 – கடும் மழை, வெள்ளம் காரணமாக வங்காள தேசத்தில் 118 பேரும் தெற்கு சீனாவில் 66 பேரும் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்
1838 – எம். சி. சித்திலெப்பை, ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1898)
1908 – சோ. இளமுருகனார், ஈழத்துப் புலவர் (இ. 1975)
1947 – லாலு பிரசாத் யாதவ், இந்திய அரசியல்வாதி
1957 – சுகுமாரன், தமிழகக் கவிஞர்

இறப்புகள்
1994 – அ. துரைராசா, பேராசிரியர், நாட்டுப்பற்றாளர், யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் (பி. 1934)
1995 – பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த்தேசியத்தந்தை(பி. 1933)
1993 – லெப்டினண்ட் கேணல் சாள்ஸ், கடற்புலிகளின் தாக்குதற் படைத் தளபதியான ஆனந்தராசா தவராஜா (பி. 1960).

No comments:

Post a Comment

Adbox