"

Tuesday, May 14, 2019

வரலாற்றில் இன்று மே 14 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்

வரலாற்றில் இன்று மே 14 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.


நிகழ்வுகள்
1264 – இங்கிலாந்தின் இங்கிலாந்தின் மூன்றாம் ஹென்றி பிரான்சில் கைது செய்யப்பட்டான்.
1610 – பிரான்சின் நான்காம் ஹென்றி மன்னன் கொலை செய்யப்பட்டான். பதின்மூன்றாம் லூயி முடி சூடினான்.
1643 – பதின்மூன்றாம் லூயி இறக்க, அவனது 4-வயது மகன் பதினான்காம் லூயி இரான்சின் மன்னனானான்.
1796 – பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் அறிமுகப்படுத்தினார்.
1811 – பராகுவாய் ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது.
1861 – ஸ்பெயினில் பார்சிலோனாவில் 859-கிராம் எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்தது.
1879 – 463 இந்தியத் தொழிலாளர்களைக் கொண்ட முதலாவது தொகுதியினர் லியோனிடாஸ் கப்பலில் பிஜியை அடைந்தனர்.
1900 – கோடைக் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பாரிசில் ஆரம்பமாயின.
1931 – சுவீடனில் தொழிற்சங்க உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க காவற்துறையினர் சுட்டதில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1939 – பெருவைச் சேர்ந்த 5 வயது நிரம்பிய லீனா மெடினா உலகின் முதலாவது வயதில் குறைந்த தாயாக அறிவிக்கப்பட்டார்.
1940 – இரண்டாம் உலகப் போர்: நெதர்லாந்து ஜெர்மனியிடம் சரணடைந்தது.
1943 – இரண்டாம் உலகப் போர்: ஆஸ்திரேலியாவின் செண்டோர் என்ற மருத்துவக் கப்பல் குயின்ஸ்லாந்துக்கருகில் ஜெர்மன் நீர்மூழ்கிக்கப்பலால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 268 பேர் கொல்லப்பட்டனர்.

1948 – இஸ்ரவேல் நாடு தன்னைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்தி தற்காலிக அரசையும் அறிவித்தது. அரபு நாடுகள் இஸ்ரேலைத் தாக்கத் தொடங்கின.
1955 – பனிப்போர்: சோவியத் ஒன்றியம் உட்பட எட்டு நாடுகள் சேர்ந்து வார்சா ஒப்பந்தம் எனப்படும் தற்காப்பு ஒப்பந்ததில் கைச்சாத்திட்டன.
1965 – இலங்கையில் ரோகண வீஜயவீர மக்கள் விடுதலை முன்னணி என்னும் அரசியற் கட்சியை ஆரம்பித்தார்.
1973 – ஸ்கைலாப் என்ற ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையம் சட்டர்ன் 5 விண்கப்பலில் விண்ணுக்கு ஏவப்பட்டது.

1976 – யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டையில் நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் தமிழீழப் பிரகடனத்தை வெளியிட்டனர்.

2004 – டென்மார்க்கின் முடிக்குரிய இளவரசர் பிரெட்ரிக், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த “மேரி டொனால்ட்சன்” என்னும் பெண்ணை திருமணம் புரிந்தார்.

   2011 – ஜேர்மனியில் இருந்து வெளியாகும் அகரம் மாதாந்த சஞ்சிகை ஆரம்பிக்கப்பட்டது.

பிறப்புக்கள்
1907 – அயுப் கான், பாகிஸ்தான் அதிபர் (இ. 1974)
1944 – ஜோர்ச் லூகாஸ், திரைப்பட இயக்குனர்
1948 – பொப் வூல்மர், தென்னாபிரிக்காவைச் சேர்ந்த பாகிஸ்தான் துடுப்பாட்ட அணியின் பயிற்றுநர் (இ. 2007)
1953 – நொரொடாம் சிகாமணி, கம்போடியாவின் மன்னர்

இறப்புகள்
1574 – குரு அமர் தாஸ், மூன்றாவது சீக்கிய குரு (பி. 1479)

1837 – ஆ. குமாரசாமிப்பிள்ளை (பி. 1784).

No comments:

Post a Comment

Adbox