"

Thursday, April 25, 2019

வாட்ஸ்அப்-ல் அடுத்த அப்டேட் ‘அனிமேட்டட் ஸ்டிக்கர்ஸ்!’வசதி விரைவில்...!


வாட்ஸ்அப்-ல் ‘அனிமேட்டட் ஸ்டிக்கர்ஸ்!’வசதி விரைவில் வர இருப்பதாக WABetaInfo தகவல் வெளிட்டுள்ளது. 

மேலும்  இந்த புதிய வசதி குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் சோதனை செய்து வருவதாகவும் கூறியுள்ளது. இந்த அனிமேட்டட் ஸ்டிக்கர்ஸ் அடுத்த சில மாதங்களில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என தெரிகிறது. ஜிஃப் ஃபைல் என்பது ஒரு சில நோடிகளில் நின்றவிடும்.

ஆனால், அனிமேட்டட் ஸ்டிக்கர் என்பது தொடர்ந்து ப்ளே ஆகிக் கொண்டே இருக்கும். அனிமேட்டட் ஸ்டிக்கரில் தனிநபர் முகபாவனைகளை இணைத்து கொள்ள முடியும் என்பதால் இந்த ஃபைல் மக்கள் மத்தியில் பிரபலமடையும் என எதிர்பார்க்கப்டுகிறது.  

ஸ்டிக்கர் பேக்ஸ் மூலம் வாட்ஸ்அப் பயனர்கள் இந்த அனிமேட்டட் ஸ்டிக்கர்ஸை பயன்படுத்த முடியும்.  மற்ற ஸ்டிக்கர்களை தரவிறக்கம் செய்வது போன்று, அனிமேட்டட் ஸ்டிக்கர்ஸையும் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

அனிமேட்டட் ஸ்டிக்கர்ஸ் போன்ற ஒரு விஷயத்தை வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த காலத்திலும் ஒரு முறை சோதனை செய்து வந்தது என்றும் தற்போது மீண்டும் அந்த சோதனையில் ஈடுபட்டுள்ளது என்றும் WABetaInfo கூறுகிறது. இந்த முறை இப்புதிய வசதி கண்டிப்பாக பயனர்களுக்குக் கிடைக்கும் எனத் தெரிகிறது. 

No comments:

Post a Comment

Adbox