"

Thursday, April 18, 2019

வரலாற்றில் இன்று ஏப்ரல் 18 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்


வரலாற்றில் இன்று ஏப்ரல் 18 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.




நிகழ்வுகள்
1025 – போலெஸ்லாவ் குரோப்றி போலந்தின் முதல் மன்னனாக முடி சூடினான்.
1797 – நியுவியெட் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை வென்றனர்.
1835 – ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது.
1880 – மிசூரியில் வீசிய புயல் காற்றினால் 99 பேர் கொல்லப்பட்டனர்.
1906 – அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நகரில் 3,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1909 – ஜோன் ஆஃப் ஆர்க் பத்தாம் பயஸ் பாப்பரசரால் புனிதப்படுத்தப்பட்டாள்.
1912 – கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் நியூ யோர்க் வந்து சேர்ந்தனர்.
1930 – பிபிசி வானொலி தனது வழமையான செய்தி அறிக்கையில் இந்நாளில் “எந்த செய்திகளும் இல்லை” என அறிவித்தது.


1941 – ஜெர்மனியப் படைகள் ஏதன்சை நெருங்கும் போது கிறீஸ் பிரதமர் அலெக்சாண்ட்ரொஸ் கொரிசிஸ் தற்கொலை செய்து கொண்டார்.
1942 – இரண்டாம் உலகப் போர்: டோக்கியோ நகர் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டன.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் ஹெலிகோலாந்து என்ற சிறு தீவின் மீது ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
1949 – அயர்லாந்து குடியரசு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
1954 – கமால் அப்துல் நாசர் எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றினார்.
1958 – இலங்கையில் பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம் முறிவடைந்தது.
1980 – சிம்பாப்வே குடியரசு (முன்னாள் ரொடீசியா) அமைக்கப்பட்டது. கனான் பனானா அதன் முதல் அதிபரானார்.
1983 – லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டனர்.
1993 – பாகிஸ்தான் அதிபர் குலாம் இசாக் கான் நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையைக் கலைத்தார்.
1996 – லெபனானில் ஐநா கட்டிடம் ஒன்றின் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 106 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1838 – பவுல் எமில் புவபோதிரான், பிரெஞ்சு வேதியியலாளர் (இ. 1912)


1858 – தோண்டோ கேசவ் கார்வே, இந்தியக் கல்வியாளர் (இ. 1962)
1858 – ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, ஈழத்து எழுத்தாளர், பதிப்பாளர் (இ. 1917)
1884 – ஜான் ஆன்வெல்ட், எசுத்தோனிய அரசியல்வாதி (இ. 1937)
1941 – மைக்கல் டேனியல் ஹிக்கின்ஸ், அயர்லாந்தின் 9-வது அரசுத்தலைவர்
1967 – மரியா பெல்லோ, அமெரிக்க நடிகை, பாடகி
இறப்புகள்
1859 – தாந்தியா தோபே, இந்திய இராணுவத் தளபதி (பி. 1814)
1916 – ஜி. சுப்பிரமணிய ஐயர், இந்திய இதழியலாளர் (பி. 1855)
1955 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், செருமனிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1879)
சிறப்பு நாள்
ஈரான் – இராணுவ நாள்
சிம்பாப்வே – விடுதலை நாள் (1980
உலக மரபுடைமை நாள் (உலக பாரம்பரிய நாள்)

No comments:

Post a Comment

Adbox