"

Tuesday, March 12, 2019

குளியல் என்பது பிரதான நிகழ்வு அந்த குளியலின் வகைகள் மற்றும் மருத்துவ பலன்கள் பற்றிய ஒரு தொகுப்பு

குளியலின் வகைகள்



ஒரு மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து நிகழ்வுகளும் இந்த குளியல் என்பது பிரதான நிகழ்வாக இருந்தது உள்ளதை காணலாம்.

மேற்கத்திய நாகரீகத்தை காட்டிலும் இந்திய நாகரீகம் சிறந்தது அதிலும் குறிப்பாக திராவிட  நாகரீகம்  மிகவும் தொன்மையானது மற்றும் சிறந்த நாகரீகமாக கருதப்பட்டு வருகிறது. அந்த வகையில்குளியல் என்பது இந்த நாகரீகத்தில்  சிறப்பாக பின்பற்றக்கூடிய ஒரு வழிமுறையாக இருந்துள்ளது. மேற்கத்திய நாடுகள் மிகவும் குளிர்ந்த பிரதேசமாக இருந்த காரணத்தினால் அவர்களில் சிறந்த குளியல் முறைகளை அவர்களது நாகரீகத்தில் காண்பது மிக அரிது.

தமிழ் நாட்டில் சோழர்கள் நடத்திய இந்திர விழா இப்பொழுது தமிழ் நாட்டில் அழிந்தாலும் நேபாளத்திலும் தென் கிழக்காசிய நாடுகளிலும் (தண்ணீர் விழா= வாட்டர் பெஸ்டிவல் என்ற பெயரில்) கொண்டாடி வருகின்றனர். 

குளியல் முறைகள் 

ஆக்னேயம்= விபூதிக் குளியல்.

வாருணம் = நீரில் முழுகிக் குளித்தல்.

பிராம்மம் = மந்திரம் சொல்லி நீரை உடல் மீது தெளித்துக் கொள்ளல் (ப்ரோக்ஷனம் செய்தல்.

வாயவ்யம் = பசுவின் பாத துளியை (மண்) உடலில் பூசிக்கொள்ளல்.

திவ்யம் = சூரியன் இருக்கும்போது பெய்யும் மழையில் நனைதல்.

குளியல் வகைகள் மற்றும் மருத்துவ பலன்கள்


சீதலம் போக்கும் குளியல்.

கால் லிட்டர் நல்லெண்ணெயில் 50 கிராம் ஓமம் இரண்டும் கலந்த எண்ணெயை வெதுவெதுப்பாக்கி, தலையில் தடவி, மசாஜ் செய்து வெந்நீரில் குளிக்கவும். தலை குளித்தால் உடனே ஜலதோஷம் பிடித்துக் கொள்பவர்களுக்கும், தும்மல் போடுவோருக்கும் இந்த வகையான எண்ணெய் குளியல் ஏற்றது. 

நறுமணம் கமழும் குளியல் 

சம்பங்கி, மருக்கொழுந்து, தவனம், செண்பகப்பூ, பன்னீர் ரோஜா மற்றும் வெட்டிவேர் ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்து, எல்லாம் மூழ்கும் அளவுக்கு நல்லெண்ணெய் விட்டு சூடாக்கவும். ஒரு நாள் அப்படியே ஊற விடவும். மறுநாள் தேவையான எண்ணெயை வடிகட்டி எடுத்து லேசாக சூடாக்கி, தலையில் தடவிக் குளிக்கவும். அடுத்த முறை தலைக்குக் குளிக்கிற வரை கூந்தல் நல்ல நறுமணத்துடன் இருக்கும். கூந்தலில் இருந்து வந்து கொண்டே இருக்கும்  மெல்லிய நறுமணமானது உங்களுக்கு புத்துணர்வையும் மன அமைதியையும் கொடுக்கும்.

கூந்தலை மிருதுவாக்கும் குளியல்

அரை கப் ஆலிவ் ஆயிலில், உதிர்த்த புதிய பன்னீர் ரோஜா இதழ்கள் ஒரு கப் சேர்த்துக் காய்ச்சவும். அதை தலைக்குத் தேய்த்துக் குளிக்கவும். இந்தக் குளியலின் மூலம் கூந்தலின் பளபளப்பு கூடும். கருப்பான கூந்தலாக இருந்தால் இன்னும் அடர் கருமையுடனும், பிரவுன் நிற கூந்தலாக இருந்தால் அழகிய பிரவுன் நிறத்துடனும் மாறும்.

குளிர்ச்சியைக் கொடுக்கும் குளியல்

பாதாம் எண்ணெய், ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் தலா கால் கப் எடுத்து, அதில் 1 டீஸ்பூன் கல் உப்பு போட்டுக் காய்ச்சவும். இந்த எண்ணெயை தலை நிறைய சொதசொதவென தடவவும். இந்தக் குளியலின் மூலம் கண்களும் உடலும் குளிர்ச்சியடையும். ஒற்றைத் தலைவலி வராது. மன அழுத்தமும் படபடப்பும் நீங்கி, மன அமைதி கிடைக்கும். வாரத்தில் 2 நாட்கள் இப்படிக் குளிக்கலாம். 

No comments:

Post a Comment

Adbox