"

Tuesday, March 12, 2019

வரலாற்றில் இன்று மார்ச் 12 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்

வரலாற்றில் இன்று, வரலாற்றுச் சுவடுகள்

வரலாற்றில் இன்று மார்ச் 12 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.


நிகழ்வுகள்
1610 – ஜேக்கப் டி லா கார்டி தலைமையில் சுவீடன் படைகள் மாஸ்கோவைக் கைப்பற்றின.
1664 – நியூ ஜேர்சி பிரித்தானியாவின் குடியேற்ற நாடானது.
1879 – ஆங்கிலோ-சூலு போர்: நூற்றுக்கும் அதிகமான ஆங்கிலப் படைகள் சூலுக்களினால் சுற்றிவளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

1894 – முதற் தடவையாக கொக்கா-கோலா மென்பானம் கண்ணாடிப் புட்டியில் அடைத்து விற்கப்பட்டது.
1913 – ஆஸ்திரேலியாவின் வருங்கால தலைநகர் அதிகாரபூர்வமாக கான்பரா எனப் பெயரிடப்பட்டது. கான்பரா அமைக்கப்படும் வரையில் 1927 வரையில் மெல்பேர்ண் தற்காலிகத் தலைநகராக இருந்தது.
1918 – 215 ஆண்டுகளாக ரஷ்யாவின் தலைநகராக இருந்த சென் பீட்டர்ஸ்பேர்க் தலைநகர் அந்தஸ்து மாற்றப்பட்டு மாஸ்கோ தலைநகராக்கப்பட்டது.
1928 – கலிபோர்னியாவில் சென் பிரான்சிஸ் அணைக்கட்டு உடைந்ததில் 400 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
1930 – மகாத்மா காந்தி பிரித்தானிய ஆட்சியாளரின் உப்பு ஆதிக்கத்துக்கு எதிராக 200 மைல் நீள தண்டி யாத்திரையை ஆரம்பித்தார்.
1938 – ஜெர்மனியப் படைகள் ஆஸ்திரியாவை ஆக்கிரமித்தன. அடுத்த நாள் இணைப்பு அறிவிக்கப்பட்டது.

1940 – குளிர் காலப் போர்: பின்லாந்து மாஸ்கோவுடன் அமைதி உடன்பாட்டிற்கு வந்தது. கரேலியாப் பகுதி முழுவதும் சோவியத் ஒன்றியம் பெற்றுக் கொண்டது. பின்லாந்துப் படைகளும் மீதமிருந்த மக்களும் உடனடியாக வெளியேறினர்.
1954 – சாகித்ய அகாதெமி இந்திய அரசினால் தொடங்கப்பட்டது.
1967 – சுகார்ட்டோ இந்தோனீசியாவின் அதிபரானார்.
1968 – மொரீசியஸ் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது
1992 – மொரீசியஸ் பொதுநலவாய அமைப்பினுள் குடியரசானது.
1993 – மும்பாயில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
2003 – செர்பியாவின் பிரதமர் சொரான் டின்டிச் கொல்லப்பட்டார்.
2006 – தென்னாபிரிக்கா ஒரு நாள் சர்வதேச துடுப்பாட்டமொன்றில் 438/9 ஓட்டங்களைப் பெற்று ஆஸ்திரேலியாவை (434) வென்று சாதனை படைத்தது.
2007 – கலிபோர்னியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீயினால் 2000 ஏக்கர்களுக்கு மேற்பட்ட நிலப்பரப்பு எரிந்து நாசமடைந்தன.

பிறப்புக்கள்
1925 – லியோ எசக்கி, நோபல் பரிசு பெற்ற ஜப்பானியர்

1984 – ஷ்ரேயா கோஷல், பாடகர்

இறப்புக்கள்
1991 – றாக்னர் கிறனிற், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1900)
2006 – சுந்தரிபாய், தமிழ்த்திரைப்பட நடிகை


சிறப்பு நாள்
மொரீசியஸ் – தேசிய நாள்.

No comments:

Post a Comment

Adbox