"

Monday, March 18, 2019

ஊட்டச் சத்துகள் நிறைந்த பிரகோலி



பிரகோலி இத்தாலி நாட்டைச் சேர்ந்த காய். அறிமுகம் இல்லாத இந்தக் காயில் நிறைய ஆரோக்கியங்கள் உள்ளன. 

இது ஊட்டச் சத்துகள் நிறைந்த காய். வைட்டமின்-சி, நார்ச் சத்து, இரும்புச் சத்து, வைட்டமின்-ஏ, பொட்டாஷியம், கால்ஷியம், மக்னீஷியம், கரொடின் மற்றும் பி-வைட்டமின்கள் நிறைந்தது. இது நீரிழிவு, புற்று நோய்,இதய நோய், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவற்றை வரவிடாமல் தடுப்பதில் முக்கிய பங்களிக்கிறது. பிரக்கோலியை வேகவைத்தோ அல்லது பச்சையாகவோ உண்ணலாம். இதனை நீங்கள் குழம்பாகவோ, பொறியலாகவோ சூப், சாஅல்ட் ஆகியவற்றில் சேர்த்து உண்ணலாம். பிரக்கோலி, ருசியான சுவையும், மொறுமொறுப்புத் தன்மையும் கொண்டது.

பிரக்கோலியின் ஆரோக்கிய நலன்கள்:
பிரகோலியில் ‘சல்ஃபேன்’ என்ற ஒரு கலவை உள்ளது. இது எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினையிலிருந்து பதுகாக்கும். கால்ஷியம் மற்றும் வைட்டமின் -கே அளவு பிரகோலியில் அதிகம் உள்ளது. இந்த இரண்டு ஊட்டச் சத்துக்களும் எலும்பின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. இது ‘ஆஸ்டியோபொராஸிஸ்’ ( osteoporosis) என்னும் நோய் வராமல் தடுக்க உதவும். இதில் அதிக அளவில் உள்ள வைட்டமின்-ஏ மற்றும் வைட்டமின்-கே, வைட்டமின்-டியின் வளர்சிதையை சமநிலையில் வைக்க உதவுகிறது. வைட்டமின்-டி மாத்திரை எடுத்துக்கொள்பவர்கலுக்கு பிரகோலி சரியான மாற்று.


புற்று நோயைத் தடுக்க:
பிரகோலி புற்றுநோயைத் தடுக்கும் பண்பு நிறைந்தது. இதற்குக் காரணம் இதிலுள்ள ‘க்ளுகோரஃபானின்’ ( Glucoraphanin’) என்னும் பொருள். இந்தக்கூறு H. pyloriஎன்னும் கிருமியை உடலிலிருந்து வெளியேற்றும் திறன் கொணடது. இந்தக் கிருமி வயிற்றில் புற்று நோயை ஏறப்டுத்தக்கூடியது. பிரகோலியில் Indole 3 carbinol என்னும் என்சைம் உள்ளது. இது ஆன்டிஆக்ஸிடன்டுகள் மற்றும் Anti inflammatory திறன் கொணட்து. இது புற்று நோய்க்கு மட்டும் உதவாமல் கல்லீரல் செயல்திறனை அதிகரிக்கிறது. இது போன்ற பண்புகள் உள்ளதால், இது ஒரு தனித் தன்மை வாய்ந்த காயாகும்.


கொழுப்பை ( cholesterol) குறைக்க:
பிரகோலி நார்ச் சத்து நிறைந்தது. எனவே அது ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் திறன் கொண்டது பிரகோலியை வேகவைத்து உண்டால் அது உடலுக்கு மிகவும் நல்லது. பிரகோலியை ஆவியில் வேகவைத்தால், அதில் உள்ள நார்ச் சத்து செரிமான பித்த அமிலங்கள் இணைகின்றன. இந்த இணைப்பினால், பித்த அமிலங்கள் வெளியேற்றபப்ட்டு கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.


ஆன்டிஆக்ஸிடென்ட் திறன்:
பிரகோலியில் மற்ற காய்களைக் காட்டிலும் வைட்டமின்கள் மற்றும் ஃபிளவனாய்டுகள் (Flavonoids) நிரைந்து உள்ளன. இதில் Carotene, Lutin, Zeaxanthin அகிய சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்டுகள் உள்ளன. இதில் உள்ள தாவர ஊட்டச் சத்துகள் ( Phytonutrients) நோய் எதிர்ப்பு அமைப்புக்கு நல்லது. 


இதய ஆரோக்கியத்திற்கு:
Sulforaphnae என்னும் பொருள் பிரகோலியில் உள்ளது. இது உடலில் எந்த சேதமும் ஏற்படாமல் பாதுகாக்கும். இது ரத்த நாளங்களை பாதுகாத்து இதய நோய் வராமல் தடுக்கிறது. பிரக்கோலி ஒரு . Golitrogenic உணவு என்று அழைக்கப்படுகிரது. Gitrogenic உணவுகள் தைராய்டு வீக்க நோய்க்கு காரணியாக இருக்கும் . Goitrogen என்னும் சுவையைக் கொண்டிருக்கும் Goitrogens சில உணவுகளில் இயற்கையாக இருக்கும் அல்லது மருந்துகள் உட்செலுத்தப்பட்டிருக்கும் . இது தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் தலையிடும். அது தைராய்டு சுரப்பி அல்லது தைராய்டு ஹார்மோன் உற்பத்தியின் போது அயோடின் சேர்க்கும். அது செயல்பட இது ஆன்டிபாடிகளை தூண்டுகிரது. இந்த நிலையில் தைராய்டு சுரப்பி தைராய்டு ஹார்மோனை போதுமான அளவூக்கு உறப்த்தி செய்ய முடியாது. இந்த நிலையில் தைராய்டு சுரப்பி அதில் உள்ள அணுக்களை பெருக்கச் செய்யும். இதனால் வீகக்ம் ஏற்படும். இதுவே தைராய்டு உருவாக்கத்துக்கு வழி வகுக்கும்.

No comments:

Post a Comment

Adbox