"

Saturday, March 23, 2019

வரலாற்றில் இன்று மார்ச் 23 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்

வரலாற்றில் இன்று மார்ச் 23 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.


நிகழ்வுகள்
1752 – கனடாவின் முதலாவது பத்திரிகை த ஹலிஃபாக்ஸ் கசெட் வெளியிடப்பட்டது.
1801 – ரஷ்யாவின் முதலாம் பவுல் மன்னன் வாள் ஒன்றினால் வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டான்.


1816 – அமெரிக்க மதப் பிரசாரகர்கள் கொழும்பு வந்தடைந்தனர்.
1848 – நியூசிலாந்தின் டுனெடின் நகரில் முதலாவது தொகுதி ஸ்கொட்டிஷ் குடியேறிகள் தரையிரங்கினர்.
1857 – எலிஷா ஒட்டிஸ் முதலாவது உயர்த்தியை நியூயார்க் நகரில் அமைத்தார்.
1868 – கலிபோர்னியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
1903 – ரைட் சகோதரர்கள் தமது வெற்றிகரமான முதலாவது வானூர்திக்கான காப்புரிமம் பெறுவதற்கு விண்ணப்பித்தனர்.
1919 – இத்தாலியின் மிலான் நகரில் முசோலினி தனது பாசிச அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார்.
1931 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களான பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
1933 – ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரியானது ரெய்க்ஸ்டாக்கினால் சட்டபூர்வமாக்கப்பட்டது.
1940 – முஸ்லீம் லீக், இந்தியாவை மத அடிப்படையில் பிரிக்கும் கோரிக்கையை வெளியிட்டது.
1942 – இரண்டாம் உலகப் போர்: இந்தியப் பெருங்கடலில், அந்தமான் தீவுகளை ஜப்பானியர் கைப்பற்றினர்.


1956 – பாகிஸ்தான் உலகின் முதல் இஸ்லாமியக் குடியரசாகியது.
1965 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது இரு விண்வெளிவீரர்களைக் கொண்ட நாசாவின் ஜெமினி 3 விண்கலம் ஏவப்பட்டது.
1966 – தனது முதல் கரந்தடி தாக்குதலில் சே குவேராவின் அணி வெற்றிகரமாக பொலிவிய ராணுவப்பிரிவை தோற்கடித்தது.
1982 – குவாத்தமாலாவின் பெர்னாண்டோ கார்சியா தலைமையிலான அரசு இராணுவப் புரட்சி ஒன்றில் கவிழ்ந்தது.
1994 – சைபீரியாவில் ரஷ்ய ஏரோபுலொட் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
1996 – தாய்வானில் முதற்தடவையாக நேரடித் தேர்தல் இடம்பெற்று லீ டெங்-ஹூய் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1998 – டைட்டானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை வென்றது.
2001 – ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையம் வளிமண்டலத்தில் வெடித்து, பீஜியின் அருகில் தெற்கு பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்தது.
பிறப்புக்கள்
1858 – லூட்விக் குயிட், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1941)
1881 – ரொஜர் டூ கார்ட், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (இ. 1958)
1881 – ஹேர்மன் ஸ்டீடிஞ்சர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1965)
1893 – ஜி. டி. நாயுடு, தமிழக விவசாய அறிவியலாளர்
1907 – டானியல் போவெட், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1992)
1910 – அகிரா குரோசாவா, ஜப்பானியத் திரைப்பட இயக்குனர் (இ. 1998)

,
1916 – ஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ங் சு‌ர்‌ஜீ‌த், இந்திய மாக்சிய கம்யூனிசத் தலைவர் (இ. 2008)
1973 – ஜேசன் கிட், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்.
இறப்புகள்
1922 – அ. குமாரசாமிப் புலவர், யாழ்ப்பாணம் தமிழ் புலவர் (பி. 1854)
1931 – பகத்சிங், இந்திய சுதந்திரப் போராட்ட வீரன் (பி. 1907)
1964 – யோக சுவாமிகள், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சித்தர் (பி. 1872)
1992 – பிரீடெரிக் ஹயெக், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1899)
2015 – லீ குவான் யூ, சிங்கப்பூரின் நிறுவனர், முதலாவது பிரதமர் (பி. 1923)

சிறப்பு நாள்
உலக வானிலை நாள்
பாகிஸ்தான் – குடியரசு நாள் (1956).

No comments:

Post a Comment

Adbox