"

Sunday, March 17, 2019

வரலாற்றில் இன்று மார்ச் 17 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்

வரலாற்றில் இன்று மார்ச் 17 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.


நிகழ்வுகள்
1776 – அமெரிக்கப் புரட்சி: பிரித்தானியப் படைகள் மசாசுசெட்சின் பொஸ்டன் நகரை விட்டு அகன்றனர்.

1805 – நெப்போலியன் தலைவனாக இருந்த இத்தாலியக் குடியரசு, இத்தாலியப் பேரரசு ஆனது. நெப்போலியன் அதன் பேரரசன் ஆனான்.
1845 – இறப்பர் பட்டி (rubber band) கண்டுபிடிக்கப்பட்டது.
1861 – இத்தாலியப் பேரரசு (1861-1946) அமைக்கப்பட்டது.
1886 – மிசிசிப்பியில் 20 ஆபிரிக்க அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.
1891 – பிரித்தானியாவின் எஸ்எஸ் யூட்டோப்பியா என்ற கப்பல் கிப்ரால்ட்டர் கரையில் மூழ்கியதில் 574 பேர் கொல்லப்பட்டனர்.
1919 – றோவ்லட் சட்டத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதற்காக மகாத்மா காந்தி சென்னை வந்தார்.
1942 – மேற்கு உக்ரேனின் லிவிவ் என்ற இடத்தைச் சேர்ந்த யூதர்கள் கிழக்கு போலந்தில் பெல்செக் என்ற இடத்தில் வைத்து நாசி ஜெர்மனியரினால் நச்சு வாயு செலுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
1950 – கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆய்வாளர்கள் கலிபோர்னியம் என்ற 98வது தனிமத்தைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.
1958 – ஐக்கிய அமெரிக்கா வங்கார்ட் 1 செய்மதியை ஏவியது.

1959 – டென்சின் கியாட்சோ, 14வது தலாய் லாமா, திபெத்தில் இருந்து வெளியேறி இந்தியா வந்து சேர்ந்தார்.
1966 – ஆல்வின் என்ற நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போன ஐக்கிய அமெரிக்காவின் ஐதரசன் குண்டை மத்திய தரைக் கடல்பகுதியில் ஸ்பெயினுக்கருகில் கண்டுபிடித்தது.
1969 – கோல்டா மெயர் (Golda Meir) இஸ்ரவேலின் முதலாவது பெண் பிரதமரானார்.
1970 – மை லாய் படுகொலைகள் தொடர்பான தகவல்களை வெளியிடாமல் மறைத்த குற்றத்துக்காக அமெரிக்க இராணுவம் 14 இராணுவ அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியது.
1988 – கொலம்பியாவின் போயிங் விமானம் ஒன்று வெனிசுவேலாவின் எல்லையில் உள்ள மலை ஒன்றில் மோதியதில் 143 பேர் கொல்லப்பட்டனர்.
1988 – எரித்திரியாவில் எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணியினர் (EPLF) எதியோப்பிய இராணுவ நிலைகளை நோக்கி மும்முனைத் தாக்குதலை ஆரம்பித்தனர்.

1992 – ஆர்ஜெண்டீனாவில் இஸ்ரேல் தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில் 29 பேர் கொல்லப்பட்டு 242 பேர் படுகாயமடைந்தனர்.

1996 – இலங்கை அணி ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து துடுப்பாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது.

2000 – உகாண்டாவில் கடவுளின் பத்துக் கட்டளைகளை மேம்படுத்தும் மத இயக்கம் ஒன்றின் உறுப்பினர்கள் 800 பேர் வரையில் அவ்வியக்கத் தலைவர்களினால் படுகொலை செய்யப்பட்டனர்.

பிறப்புக்கள்
1881 – வால்ட்டர் ஹெஸ், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1973)
1920 – ஷேக் முஜிபுர் ரகுமான், வங்காள தேசத்தின் தந்தை (இ. 1975)

இறப்புக்கள்
1937 – ஒஸ்டின் சாம்பர்லேன், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (பி. 1863)
1956 – ஐரீன் ஜோலீயோ-கியூரி, வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1897)

1983 – ஹால்டன் ஹார்ட்லைன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1903)

சிறப்பு நாள்
அயர்லாந்து – சென் பாட்றிக் நாள்.

No comments:

Post a Comment

Adbox