"

Wednesday, February 27, 2019

இந்திய விமான படை வீரரை கைது செய்தது பாகிஸ்தான் ராணுவம், பதட்டமான சூழ்நிலையில் இந்தியா பாகிஸ்தான் நாடுகள்


இன்று காலையில் இந்தியா எல்லையிக்கு நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தின் எப்-16 விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது. இதனிடையே இந்தியாவை சேர்ந்த போர் விமானமான மிக் 21 விமானத்தை பாகிஸ்தான் காஷ்மீர் பகுதியில் சுட்டு வீழ்த்தியது. 

இதில் சென்னையை சேர்ந்த விமானி அபினந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். அபிநந்தனை பாக்கிஸ்தான் ஆர்மி அடித்து, தரதரவென இழுத்து செல்வது, அபிநந்தன் ரத்த காயத்துடன், இருப்பது அவரின் கண்களை கட்டி விசாரணை செய்வது போன்ற விடியோக்கள் வெளியாகி உள்ளது.

இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் விஷயத்தில் பாகிஸ்தான் மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ ராணுவத்தினர் தனக்கு அளித்துள்ள பாதுகாப்பு குறித்து விமானி அபினந்தன் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், விமானியிடம் பாகிஸ்தான் ராணுவத்தினர் கேள்வி எழுப்புவதும், அதற்கு அவர் பதிலளிக்கும் வீடியோவில். நான் இப்போது சொல்லும் கருத்துகளை இந்தியா சென்ற பிறகு மாற்றிக் கூற மாட்டேன். என்னைப் பாகிஸ்தான் ராணுவத்தினர் நன்றாகவே நடத்துகிறார்கள். என்னை விபத்திலிருந்து மீட்ட வீரர்கள், கேப்டன் என அனைவரும் நன்றாகவே நடத்தி வருகிறார்கள். இதைத்தான் இந்தியா ராணுவத்திடமிருந்து எதிர்பார்க்கிறேன். பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்தும் விதம் என்னை ஈர்த்துள்ளது. நான் தென்னிந்தியாவைச் சேர்ந்தவன். எனக்குக் கல்யாணம் முடிந்துவிட்டது'' என்றார். தொடர்ந்து அவரிடம், உங்கள் விமானம் என்ன. என்ன பணிக்காக வந்தீர்கள் எனப் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கேட்க அதற்குப் பதில் கூற மறுத்துவிட்டார்.


பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டுவீழ்த்தப்பட்டு விபத்துக்குள்ளான இந்திய போர் விமானத்தில் இருந்த விமானி அபிநந்தன் சென்னை தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம் யஸ்வந்த் நகர் ஜெல்வாய் விஹார் விமானப்படை குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரின் பூர்வீகம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வெம்பாக்கத்தை அடுத்த திருபனைமூர் காஞ்சிபுரத்திலிருந்து 18 கி.மீட்டர் தூரத்தில் இருக்கிறது, அவரது தந்தை வரதமன் அவரும் விமானப்படையிலேயே பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது தாய் மல்லிகா இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். அவரது தாத்தாவும் விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது பள்ளிப்படிப்பை வடமாநிலத்தில் உள்ள விமானப்படை பள்ளியில் படித்தவர். கடந்த 2004-ல் தாம்பரம் விமானப்படை பயிற்சி தளத்தில் பயிற்சி பெற்று தற்போது தனது மனைவி குழந்தைகளுடன் டெல்லியில் உள்ள விமானப்படை குடியிருப்பில் குடியிருந்து வருகிறார். இவர் பத்திரமாக நாடு திரும்ப இந்தியர்கள் பிராத்தனை செய்து வருகின்றனர். 

No comments:

Post a Comment

Adbox