"

Wednesday, February 27, 2019

சுவையான சுண்டக்காயின் மருத்துவ குணங்களும் பயன்களும் ஒரு பார்வை.



கத்தரிக் குடும்பத்தைச் சார்ந்த புதர்ச்செடி, வெப்பத் தன்மையும் காப்புச் சுவையும் உடையது இந்த சுண்டக்காய். 


நமது வீட்டுத் தோட்டங்களில் மிக எளிமையாக வளரக்கூடிய ஒரு வகைத் தாவரம். சிறிது ஈரப்பதம் இருந்தால் கூட இந்த தாவரமானது மிக விரைவாக வளர்ந்து பலனை தரக்கூடியது. சுண்டை இலைகள் பெரியவை, கொத்தாகவும், பல கிளைகளுடனும், சுணைகள் கொண்டதாகவும் காணப்படும்.


சுண்டைக்காய்  நமது வீடுகளில் குழம்பு வகைகள் மற்றும் வற்றல் வகைகளில் பயன்படுத்தக்கூடிய  தனி சிறப்பு வாய்ந்த ஒரு பதார்த்தமாகும். இவற்றின் சுவை மற்றும் மணம் அலாதியானது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சுண்டைக்காய் சமையலில் மட்டுமல்லாது நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடியது.


இந்த சுண்டைக்காயின் மருத்துவ பயன்களைப்  காண்போம்

குழந்தைகளின் வயிற்றில் உள்ள பூச்சிகளை கட்டுப்படுத்த சுண்டைக்காய் வற்றல் ஆனது பயன்படுகிறது. நன்கு முதிர்ச்சி அடைந்த காய்களை உப்பு மோரில் ஊறவைத்து வற்றலாகப்  இதனை பயன்படுத்தலாம். இந்த வற்றலை எண்ணெயில் பொரித்து பின்பு உணவுக்கு முன்பாக பொடி செய்து உட்கொள்ளும் பொழுது குழந்தைகளின் வயிற்றில் உள்ள பூச்சிகளை கட்டுப்படுத்தும். 

மேலும் பெரியவர்களுக்கு வயிற்றில் ஏற்படக்கூடிய புண் மற்றும் வயிற்று உபாதைகளுக்கு சிறந்த மருந்தாகிறது. பச்சையான இளம் சுண்டைக்காய்களை குழம்பு செய்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டுவர மூலம் கட்டுப்படும்.


சுண்டைக்காயில் அதிக அளவு கால்சியம் சத்தை கொண்டுள்ளது. எனவே இந்த சுண்டைக்காய் குழம்பாகவோ அல்லது வற்றலாகவோ உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுது போதுமான அளவு கால்சியம் சத்தானது உடலுக்கு கிடைக்கிறது இதன் மூலம் எலும்புகள் உறுதிப்படும் நரம்பு மண்டலமும் சீராக செயல்படும்.


பலருக்கும் ஏதேனும் ஒரு காரணத்தால் சமயங்களில் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் இவற்றை சம எடையாக எடுத்து, நன்கு காயவைத்து, வறுத்து, இடித்துத் தூள் செய்துக் கொள்ள வேண்டும். இதனை, 2 சிட்டிகை அளவு, 1 டம்ளர் மோருடன் கலந்து காலை, மாலை வேளைகளில், இரண்டு நாட்களுக்கு சாப்பிட்டு வர வயிற்றுப்போக்கு, சீதபேதி நிற்கும்.


சுண்டக்காய் சற்று உஷ்ண தன்மை கொண்ட ஒரு காய் வகையாகும். ஜலதோஷம் அல்லது சளி பாதிப்புகள் ஏற்பட்டவர்கள் பிஞ்சு சுண்டைக்காயைச் சமைத்து சுண்டைக்காய் காரக்குழம்பு செய்து சாப்பிட்டு வந்தால் சாப்பிட்டு வந்தால் தொண்டை, நெஞ்சில் ஏற்படும் சளிக்கட்டு குறையும்.



No comments:

Post a Comment

Adbox