ஆர்க்கிடெக்சர் கல்வி நிறுவனங்களில் இளநிலை பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கைக்காக ’நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் ஆர்கிடெக்சர்’ (நாட்டா) எனும் தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது.
‘கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர்’ நடத்தும் இந்த தேர்வில், தேர்ச்சி பெற்றால் மட்டுமே இந்தியாவில் பி.ஆர்க., படிப்பில் சேர்க்கை பெற முடியும். இத்தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
படிப்பு: பேச்சுலர் ஆப் ஆர்க்கிடெக்சர் (பி.ஆர்க்.,)
தகுதிகள்:
பத்தாம் வகுப்பிற்கு பிறகு 12ம் வகுப்பு அல்லது டிப்ளமா படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்து, குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
17 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
தேர்வு முறை:
மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு கணினி வழி தேர்வாக, இரண்டு முறை இந்த தேர்வு நடத்தப்படுகிறது. கணிதம் மற்றும் பொது அறிவு பிரிவில் அப்ஜெக்டிவ் டைப் கேள்விகளாக 120 மதிப்பெண்ணிற்கு கேள்விகள் கேட்கப்படும். மீதமுள்ள 80 மதிப்பெண்ணிற்கு மாணவர்களின் வரைதல் திறனை பரிசோதிக்கப்படுகிறது. தவறான பதில்களுக்கு ‘நெகடிவ்’ மதிப்பெண் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
நாட்டா தேர்விற்கான அதிகாரப்பூர்வ வலைத்தளம் வயிலாக, மாணவர்கள் அவர்களது விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்:
முதல் தேர்வு - மார்ச் 11
இரண்டாம் தேர்வு - ஜூன் 12
தேர்வு நாள்:
முதல் தேர்வு -ஏப்ரல் 14
இரண்டாம் தேர்வு - ஜூலை 7
No comments:
Post a Comment