"

Wednesday, February 13, 2019

வரலாற்றில் இன்று பிப்ரவரி 13 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்

வரலாற்றில் இன்று பிப்ரவரி 13  உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.



நிகழ்வுகள்
1258 – பக்தாத் மங்கோலியரிடம் வீழ்ந்தது.
1668 – ஸ்பெயின் போர்த்துக்கலை தனிநாடாக அங்கீகரித்தது.
1755 – ஜாவாவின் மடாரம் பேரரசு “யோக்யகர்த்தா சுல்தானகம்” மற்றும் “சுரகர்த்தா சுல்தானகம்” என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
1880 – எடிசன் விளைவை தொமஸ் எடிசன் அவதானித்தார்.
1914 – பொன்னம்பலம் அருணாசலத்திற்கு சேர் பட்டம் பக்கிங்ஹாம் அரண்மனையில் வழங்கப்பட்டது.
1934 – சோவியத் நீராவிக்கப்பல் செலியூஷ்கின் ஆர்க்டிக் பெருங்கடலில் மூழ்கியது.
1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரை ஹிட்லரின் நாசிப் படைகளிடம் இருந்து மீட்டன.
1960 – பிரான்ஸ் தனது முதலாவது அணுகுண்டை சோதித்தது.
1971 – வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்காவின் உதவியுடன் தெற்கு வியட்நாம் லாவோசைத் தாக்கியது.
1974 – நோபல் பரிசு பெற்ற அலெக்சாண்டர் சொல்ஷெனிட்சின் சோவியத் ஒன்றியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.
1975 – நியூயோர்க் நகரில் உலக வர்த்தக மையத்தில் தீ பரவியது.
1978 – சிட்னியில் ஹில்டன் உணவகத்தின் முன் குண்டு வெடித்ததில் ஒரு காவற்படை உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர்.
1984 – கான்ஸ்டன்டீன் செர்னென்கோ சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார்.
1985 – கொக்கிளாய் இராணுவ முகாம் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அழிக்கப்பட்டது.
1990 – இரண்டு ஜெர்மனிகளும் இணைவது குறித்த இரண்டு-கட்டத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
1996 – நேபாள மக்கள் புரட்சி மாவோயிசவாத போராளிகளால் ஆரம்பிக்கப்பட்டது.
2001 – எல் சல்வடோரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 400 பேர் வரை கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்
1879 – சரோஜினி நாயுடு, இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை (இ. 1949)
1910 – வில்லியம் ஷாக்லி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1989)
1920 – அ. மருதகாசி, தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் (இ. 1989)
1934 – வெ. யோகேசுவரன்]], இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1989)
1937 – ரூப்பையா பண்டா, சாம்பிய அரசுத்தலைவர்

இறப்புகள்
1883 – ரிச்சார்ட் வாக்னர், செருமானிய இயக்குனர், இசையமைப்பாளர் (பி. 1813)
1950 – செய்குத்தம்பி பாவலர், தமிழறிஞர் (பி. 1874)
2009 – கிருத்திகா, தமிழக எழுத்தாளர்
2014 – பாலுமகேந்திரா, தமிழ்த் திரைப்பட இயக்குநர் (பி. 1939)

No comments:

Post a Comment

Adbox