"

Friday, February 1, 2019

மோடியின் அரசின் இந்த பட்ஜெட் மக்களை கவருமா.? வாரி வழங்கப்பட்ட வரி சலுகைகளின் தொகுப்பு



அதில் கடந்த 5 ஆண்டுகளில் முக்கிய பொருளாதாரா நாடாக உலக அளவில் இந்தியா அடையாளம் காணப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசில் இந்தியா முன்னேற்றப்பாதையில் செல்கிறது மக்களின் கனவுகளை நனவாக்க மத்திய பாஜக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.சராசரி பணவீக்கத்தை 4.6% ஆக மாற்றியுள்ளோம் 2008-14 ஆண்டில் வங்கிகளின் கடன் அதிக அளவில் இருந்தது.அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் தொடங்கமுடியாத சூழல்இருந்தது பல்வேறு விதமான வங்கிச் சீர்த்திருத்தங்களால் வாராக்கடன் அளவு குறைந்துள்ளது.விலைவாசி உயர்வு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது . லைவாசியை கட்டுப்படுத்தியிருந்தது.


மாநிலங்களுக்கான நிதிஒதுக்கீடு 32% லிருந்து 42%-ஆக அதிகரித்துள்ளது. எவ்வளவு பெரிய தொழிலதிபர்கள் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். லஞ்சம், ஊழலை ஒழிக்க வெளிப்படையான நடைமுறைகளை கொண்டு வந்துள்ளோம் .நிலக்கரி மற்றும் ஸ்பெக்ட்ரம் ஏலம் வெளிப்படையாக நடத்தப்பட்டது.
அனைவருக்கு வீடு, கழிப்பறை, மின்சாரம் ஆகியவற்றை 2022-ம் ஆண்டுக்குள் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.5.45 லட்சம் கிராமங்களுக்கு கழிப்பறை வசதிகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளது. பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 17லட்சத்து 4ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.வாராகடன் ரூ.3 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.21 எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றில் 14 பா.ஜ.க அரசில் அறிவிக்கப்பட்டவை.நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.


இந்த தொகை ரூ.2000 வீதம் 3 தவணைகளாக வழங்கப்படும்.திட்டத்தால் 12 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் .விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்குவதன் மூலம் ரூ.75,000 கோடி செலவாகும்.வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 26 வாரம் பிரசவ விடுப்பு அளிக்கப்படும்  என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உரையில் தெரிவித்துள்ளார்.

தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிப்பு. நிரந்தர கழிவு ₹40,000 இருந் ₹50,000 உயர்வு. ரூ.40,000 வைப்பு தொகைக்கு கிடைக்கும் வட்டி வருவாய்க்கு வருமான வரி பிடித்தமில்லை. 80சி பிரிவுக்கான வரிக் கழிவுகள் 1.5 லட்சத்தில் எந்த மாற்றமும் கொண்டு வரப்படவில்லை.அஞ்சல் சேமிப்பு திட்டத்தில் கிடைக்கும் வட்டியை வழங்கும் போது வருமான வரி பிடித்தமில்லை 6.25 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் கூட வரி கட்ட தேவை இருக்காது.

வீட்டு வாடகையிலிருந்து வரும் வருமானத்திற்கு வரிச்சலுகை ரூ.1.8 லட்சத்திலிருந்து ரூ.2.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது   வரிவிலக்கு சலுகையால் அரசுக்கு ரூ.18,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்

No comments:

Post a Comment

Adbox