"

Saturday, February 2, 2019

தனி நபர் வருமான வரி 2019-20 நிதி ஆண்டுக்கானது, அடித்தது ஜாக்பாட் 5 லட்சம் ரூபாய் வரை வரி இல்லை.


இதுவரை 2.5 லட்சம் ஆண்டு வருவாய் கொண்ட தனி நபருக்கு வருமான வரி விலக்கு வழங்கப்பட்டது. 2.5-5.0 லட்சம் வரையிலான வருவாய்க்கு 5 சதவீதம், 5-10 லட்சம் ரூபாய் வரையிலான வருவாய்க்கு 20 சதவீதம், அதற்கு மேல் 30 சதவீதம் என வருமான வரி விதிக்கப்பட்டது.

இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில், ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி கிடையாது என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.550,000 என்று வைத்துக்கொள்வோம். அதில் நிலையான கழிவு 50,000 போய்விடும். எனவே அவர் ஆண்டு வருவாய் ரூ.5 லட்சம் என்று கணக்கிடப்படும். அந்த நபர் ஒரு பைசா கூட வருமான வரியாக செலுத்த வேண்டியதில்லை.
புதிய அறிவிப்பால், இந்த அளவுக்கு வருவாய் கொண்டவர்கள் ரூ.15 ஆயிரத்து 80 சேமிக்க முடியும். அதாவது வருமான வரியை மிச்சப்படுத்துவிடலாம்.

Basic Salary + DA377,200377,200
Other Taxable Allowances172,800172,800
Gross Salary550,000550,000
Standard Deduction (deducted)40,00050,000
Total Income under the head 'salary'510,000500,000
Income Tax14,50012,500
Rebate under section 87A (deducted)012,500
Total tax payable after Rebate14,5000
Surcharge @10% / 15%00
Total tax payable after surcharge14,5000
Education Cess @ 4%5800
Total tax, surcharge and education cess15,0800



ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சத்திற்கு இடையே இருப்பவர்களுக்கு 20 சதவீதம் வருமான வரி வசூலிக்கப்படுகிறது. ஒருவரின் ஆண்டு வருமானம் 10,0000 ரூபாய் என வைத்துக்கொள்வோம். அவர் நிலையான கழிவு 50,000 போக எஞ்சிய 9.5 லட்சத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டும். தற்போது நிலையான கழிவு 40,000 என்ற அளவில் கணக்கிடப்படுகிறது. பியூஷ் கோயல் அதை 50,000 என்று அதிகரித்துள்ளார். எனவே, தற்போது 10 லட்சம் வருவாய் ஈட்டும் ஒருவர் ரூ.108,680 வரை வருமான வரி மற்றும் கல்வி செஸ் என்ற வகையில் செலுத்தி வருகிறார்கள். புதிய நிலையான கழிவு அறிவிப்பால் அந்த வருவாய் பிரிவினர் இனிமேல் 1,02500 அளவுக்கு வருமான வரி செலுத்தினால் போதும். சேமிப்பு ரூ.2,080 ஆகும்.

Basic Salary + DA7,77,2007,77,200
Other Taxable Allowances2,22,8002,22,800
Gross Salary10,00,00010,00,000
Standard Deduction (deducted)40,00050,000
Total Income under the head 'salary'9,60,0009,50,000
Income Tax1,04,5001,02,500
Rebate under section 87A (deducted)00
Total tax payable after Rebate1,04,5001,02,500
Surcharge @10% / 15%00
Total tax payable after surcharge1,04,5001,02,500
Education Cess @ 4%4,1804,100
Total tax, surcharge and education cess1,08,6801,06,600

No comments:

Post a Comment

Adbox