"

Wednesday, February 6, 2019

திவாலாய் போன ரூ 1000 கோடி மெய்நிகர் பண(க்ரிப்டோ காயின்) முதலீடு ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் ..?


கனடாவினை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் க்வாட்ரீகாசிஎக்ஸ் என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்த ஜெரால்டு கோட்டேன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது தனது 30 வயதில் நோயின் காரணமாக இறந்தார். 

க்வாட்ரீகாசிஎக்ஸ் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ் முறையில் முதலீட்டாளர்களின் 1000 கோடி ரூபாய் பாஸ்வோர்டினை யாரிடமும் சொல்லாமல் இந்நிறுவனத்தின் அதிபர் Gerald Cotten's மரணமடைந்துள்ளார். எனவே 1000 கோடி ரூபாயை மீட்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

இவருடைய இல்லத்தின் அனைத்து இடங்களிலும் தேடி இதுவரை இதற்கான கடவுச்சொல் கிடைக்கப் பெறவில்லை. பொதுவாக ஆன்லைனில் ஹேக்கர்கள் அதிகம் என்பதனால் பொதுவாக இது தொடர்பான விபரங்களை ஆஃப்லைனில் வைப்பார்கள். இவருடைய லேப்டாப் முதல் மொபைல் உட்பட அனைத்தும் முழுமையாக என்கிரிப்ட் செய்து ஹேக்கிங் செய்ய இயலாத முறையில் வைத்துள்ளாராம். இவருடைய லேப்டாப் தற்போது ஹேக்கர்கள் துனையுடன் திறக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். ரூ.1000 கோடி சிக்குமா இல்லை மாயமாகும் என்பது இனி தெரிய வரும்.

ஒரு லட்சம் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கவேண்டிய 1,000 கோடி ரூபாய்  பிட்காயின் மற்றும் பிற கிரிப்டோகரன்சிகளை செலுத்த இயலாமல் இந்நிறுவனம் சிக்கியுள்ளது. இதனால் இந்தச் சிக்கலை தீர்க்கும்வரை சில காலம் தங்களுக்கு 'creditor protection' வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Adbox