ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் 4-வது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் ஆசிரியர்கள் போராட்டத்தால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில் பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளிக்கும்படி தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தமிழக அரசின் இந்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும், பணிக்கு வராத ஆசிரியர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க இயலாது என திட்டவட்டமாக நீதிபதிகள் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment