"

Monday, January 28, 2019

விஸ்வரூபம் எடுக்கும் அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டம்



அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் களின் போராட்டம் கடந்த 22ஆம் தேதி முதல் மிகப்பெரிய அளவில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அரசு மாநிலம் முழுவதும் 420 அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்துள்ளது. பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாமல் போராட்டத்தில் ஈடுபட்ட வண்ணம் உள்ளன. இது அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது 

இந்நிலையில் இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதக்கூடிய மாணவர்களின் பெற்றோர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். ஆசிரியர்கள் வகுப்பில் இல்லாத காரணத்தினால் பள்ளியில் கற்றல் கற்பித்தல் பணி நடைபெறவில்லை. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். 

இதனால் பெற்றோர் மற்றும் மாணவர்கள் பல்வேறு இடங்களில் வகுப்புகள் சரிவர இயங்கவில்லை எனக்கூறி பள்ளிக்கு ஆசிரியர்களை சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி அரசு வரவைக்க வேண்டும். 

என மாணவர்களும் பெற்றோர்களும் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இது ஆசிரியர்கள் மற்றும் அரசுக்கு எதிரான போராட்டமாக  விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில் அரசு எந்தவிதமான தன்னுடைய நிலைப்பாட்டை அறிவிக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது. இது மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment

Adbox