"

Friday, January 4, 2019

'கல்வி தொலைக்காட்சி’ என்ற சேனலை துவங்கவுள்ளது தமிழக அரசு


பள்ளி மாணவர்களின் கல்விக்கு என்று பிரத்யேகமாக ‘கல்வி தொலைக்காட்சி’ என்ற சேனலை தமிழக அரசு ஜன.21 முதல் தொடங்க இருக்கிறது. அதன்படி, 24 மணி நேரமும் செயல்படும் இந்த சேனலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார். கல்வி தொலைக்காட்சியில் ‘ரைம்ஸ்’ முதல் ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கல்வியை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

மாணவர்களுக்கு கல்வியை எளிதாக கொண்டு செல்லும் வகையில் பாடல்கள், அனிமேஷன் காட்சி வடிவிலான நிகழ்ச்சிகளும் இடம் பெறுகிறது. கல்வி சார்ந்த அறிவிப்புகளை போன்று, கல்வி உதவித்தொகை, பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள் தொடர்பான தகவல்களையும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

‘நீட்’ தேர்வுக்கான பயிற்சியை நேரலையாகவும், தங்கள் சந்தேகங்கள் குறித்து நிபுணர்களோடு கலந்துரையாடும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சோதனை அடிப்படையில் கல்வி தொலைக்காட்சியை தொடங்கும்போது 8 மணி நேரத்தில் 15 வகையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். அதன் தொடர்ச்சியாக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் ஒளிபரப்பப்படும்.

No comments:

Post a Comment

Adbox