"

Wednesday, January 16, 2019

சீனா நிலாவில் பருத்தி விதைகளை முளைக்க வைத்து சாதனை


சீனாவானது ஜனவரி 3 , 2019 அன்று வெற்றிகரமாக தனது சேன்ஜ் 4 ஆய்வு விண்கலனை நிலவின் மறுபக்கத்தில் தரை இறக்கியது. இது யாரும் நிலவின் மறுபக்கத்தை திரும்பி பார்த்திராக வகையில் அமைந்து இருந்தது. , சேஞ்-4 என்ற விண்கலம் நிலவின் மறுபக்கத்தில் தரையிறங்கி பருத்தி விவசாயம் செய்து வருகின்றது.

சீனா அனுப்பிய பருத்தி விதைகள் முளைக்கத் தொடங்கியுள்ளன என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நிலவின் தட்டவெப்ப சூழலில் பருத்தி விதைகள் முளைக்க வைப்பதன் மூலம், அங்கு உயிர் வாழும் சூழலை மேலும் ஆய்வு செய்யும் சாதகம் ஏற்பட்டுள்ளது சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

மேலும் இதுபோன்று உருளை கிழங்கு உள்ளிட்ட சில பயரிகளின் விதைகளையும் முளைக்க வைக்க சீன விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பின்பு இந்த ஆய்வை உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆய்வாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Adbox