"

Wednesday, January 16, 2019

கொட்டாங்குச்சியை சலுகையில் விலையில் ரூ.1500க்கு விற்பனை செய்வதாக அமேசான் நிறுவனம்


நம் ஊரில் தேங்காய் விலை ரூ.20 முதல் தொடங்குகின்ற நிலையில் கொட்டாங்குச்சியை சலுகையில் விலையில் ரூ.1500க்கு விற்பனை செய்வதாக அமேசான் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 




நம்மூரில் எளிமையாக கிடைக்கக்கூடிய கொட்டாங்குச்சியை அமேசான் நிறுவனம் 1,500 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக அறிவித்து இருந்தது. இந்நிலையில் தற்சமயம் விலை 150 ரூபாய்க்கு விற்பனை செய்ய விளம்பரம் பதிவிட்டு உள்ளது. அதுவும் எது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இந்த சலுகை.  ஒரு நபர் பத்து கொட்டாங்குச்சியில் மட்டுமே ஆர்டர் செய்ய முடியும் அதற்கு மேல் ஆர்டர் செய்பவர்கள் அவருடைய order தானாகவே ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளது. 

ஒரு கொட்டாங்குச்சி சமையலறையிலிருந்து தேவையற்ற பொருளாக தூக்கி எறியப்படுகிறது அல்லது நம் கிராமங்களில் அடுப்பெரிக்க பயன்படக் கூடியதாக இருக்கிறது. இத்தகைய கொட்டாங்குச்சியை அமேசான் நிறுவனம் 150 ரூபாய்க்கு தற்சமயம் விற்பனை செய்ய முன்வந்துள்ளது இதுகுறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. 1500 ரூபாயிலிருந்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்ய முன்வந்துள்ளது இந்த கொட்டாங்குச்சி ஆர்டர் செய்பவர்களுக்கு return back policy  அளித்துள்ளது.

இந்த விற்பனை வெளியீடு இந்தியர்களை அதிர வைத்துள்ளது.இதுகுறித்து பலரும் டிவிட்டரில் கொட்டாங்குச்சி சப்ளை செய்தால் கோடீஸ்வரராக ஆகலாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த சலுகை பயன்படுத்தி நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் இப்பொழுது...!

No comments:

Post a Comment

Adbox