"

Thursday, January 31, 2019

இந்த ஆண்டு முதல் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாள் அமைப்பில் மாற்றம்...! மரம் வளர்க்கும் மாணவருக்கு ஒரு பாடத்துக்கு 2 மதிப்பெண்


இந்த ஆண்டு முதல் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாள் அமைப்பில் மாற்றம். மரம் வளர்க்கும் மாணவருக்கு ஒரு பாடத்துக்கு 2 மதிப்பெண்.


தமிழக அரசு தேர்வுகள் இயக்குனரகம் இந்தாண்டு பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகளில் புதிய மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி 15 ஒரு மதிப்பெண் கொண்ட கேள்விகளில் புதிதாக இந்த ஆண்டு முதல் சரியா தவறா கோடிட்ட இடங்களை நிரப்புக மற்றும் பொருந்தாதவற்றை தேர்வு செய் போன்ற புதிய கேள்வி முறைகளை புகுத்தியுள்ளது. 

இந்த புதிய முறைக்கான கேள்வித்தாள் வடிவமைப்பின் மாதிரி அரசு தேர்வுகள் இயக்குனரகம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாதிரி வினாத்தாள் மாதிரிகளை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் பதிவு இறக்கம் செய்து சார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என தேர்வுகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.

மேலும் மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், மரம் வளர்க்கும் மாணவருக்கு ஒரு பாடத்துக்கு 2 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 12 மதிப்பெண்கள் வழங்கும் முறையை அடுத்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்த உள்ளது .

No comments:

Post a Comment

Adbox