"

Tuesday, December 25, 2018

ஏன் அன்றைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகள் பருவமடைந்த உடனே பாவாடை தாவணி கட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்?


பெண் பிள்ளைகள் பருவமடைந்த உடனே பாவாடை தாவணி கட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.பின்னர் சில வருடங்கள் கழித்து திருமணம் ஆகும் வயதில் சேலை கட்டினார்கள்...இதற்கு காரணம் என்ன?


பருவமடைந்ததன் காரணமாக, கர்ப்பபை உள்ள இடத்தில் தொப்பிளை சுற்றிலும் காற்றோட்டம் இருக்க வேண்டும் என்பதற்க்காகத் தான் தாவணி போடும் பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள். அப்போது தான் அங்கு அதிக உஷ்ணம் ஏற்படாமல் இருந்து கர்ப்பபையை காக்கும் என்பதற்காகத்தான்.ஆனால் இன்று ஜீன்ஸ், டீ ஷர்ட் போட்டு உள்ளே செல்லும் காற்றின் அளவை குறைத்தார்கள்.

இதனால் கர்ப்பபை உஷ்ணம் அடைந்து வெப்பம் வெளியேற வழியின்றி கர்ப்பபையை காக்க நீர்கட்டியை கர்ப்பபையிக்குள் உருவாக்கி உஷ்ணத்தை குறைக்க முயற்சி செய்கிறது.
ஆதி காலத்தில் பெண்கள் வீட்டினை சாணம் இட்டு மொழுவுவார்கள். அது ஓர் சிறந்த உடற்பயிற்சி. வயிற்றினை அழுத்தி மண்டியிட்டு வேலைசெய்யும் பொழுது, நரம்புகளும், இடுப்பு எலும்புகளும் வலுப்படும். 

சாஃப்ட்வேர் நிறுவனங்களில் மணிக்கணக்காக உட்கார்ந்து வேலை பெண்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போது பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள இரத்த ஓட்டம் தடை, ஹார்மோன்களும் சரிவர சுரப்பதில்லை. இரவில் கண் முழித்து, பல வேலை செய்து, பகலில் தூங்குவதினால், உடல் வெப்பம் அதிகமாகிறது. நாகரீகம் வளர்ச்சி என்று எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின் போதும் ஆரோக்கியம் என்ற விசயத்தில் பத்து அடி பின்னோக்கி செல்கிறோம். 

No comments:

Post a Comment

Adbox