தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பல்வேறு போராட்டகளுக்கு இடையே ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டையும் காலம் காலமாக விளையாடி வருகின்றனர்.
உச்சநீதி மன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த நிலையில், அதை எதிர்த்து தமிழகமே திரண்டது.
அதையடுத்து, ஜல்லிக் கட்டு நடத்தும் வகையில் சிறப்பு சட்டம் இயற்றப்பட்டு கடந்த ஆண்டு முதல் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டி பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், நிபந்தனைகளுடனும் நடைபெற்று வரு கிறது.
இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில், ஜனவரி 15-ம் தேதி மதுரை - அவனியாபுரத்திலும், ஜனவரி 16-ம் தேதி பால மேட்டிலும், ஜனவரி 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment